முத்தரப்பு ஒருநாள் தொடர்: பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை
செய்தி முன்னோட்டம்
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த இலங்கை அணிக்கு, தொடக்கத்திலிருந்தே பந்துவீச்சாளர்கள் அபாரமான பங்களிப்பை வழங்கினர். இதனால் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்காவின் அனல் பறக்கும் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்த பாகிஸ்தான் அணி, 25.3 ஓவர்களில் வெறும் 110 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபமாகச் சுருண்டது.
எளிதான சேஸிங்
மதுஷங்காவின் அசுர பந்துவீச்சு
பாகிஸ்தான் அணியின் பேட்டர்கள் சீரான இடைவெளியில் வெளியேற, அதிகபட்சமாக பாபர் அசாம் மட்டுமே 29 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.
அபாரமாகப் பந்துவீசிய இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்கா 5 விக்கெட்டுகளைச் சாய்த்து பாகிஸ்தான் அணியை நிலைகுலையச் செய்தார்.
இதையடுத்து 111 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
பொறுப்புடன் ஆடிய கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 62 ரன்களும், பவன் ரத்நாயக்கே 23 ரன்களும் குவித்தனர்.
தோல்வியடைந்தாலும், பாகிஸ்தான் அணி ஏற்கெனவே இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.