Loading...
ஐபிஎல் 2027 தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 16-ஆம் தேதி கோவாவில் நடைபெறுகிறது
ஐபிஎல் 2027 மினி ஏலம் டிசம்பர் 16-ல் கோவாவில் நடைபெறுகிறது.

ஐபிஎல் 2027 தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 16-ஆம் தேதி கோவாவில் நடைபெறுகிறது

எழுதியவர் Vasuki
Oct 26, 2026
08:16 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியன் பிரீமியர் லீக் 2027 தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி கோவாவில் நடைபெறவுள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த ஏலத்திற்கு முன்னதாக, 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்களின் பட்டியலை வரும் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் பிசிசிஐ-யிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அணிகள் வெளியிடும் தக்கவைப்பு மற்றும் விடுவிப்பு பட்டியலுக்குப் பிறகே, ஒவ்வொரு அணியிடமும் ஏலத்தில் செலவிட எவ்வளவு நிதி மீதமுள்ளது என்பது முழுமையாகத் தெரியவரும்.

டிரேடிங்

வீரர்கள் பரிமாற்றம் 

கடந்த 2026-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் நிறைவடைந்த பிறகு, அணிகளுக்கு இடையேயான வீரர்கள் பரிமாற்ற சாளரம் மூலம் இரண்டு முக்கிய மாற்றங்கள் அதிகாரப்பூர்வமாக நடைபெற்றுள்ளன.

அதன்படி, கடந்த ஜூன் மாதம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மாற்றப்பட்டார்; அவருக்குப் பதிலாக டெல்லி அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் லக்னோ அணிக்குச் சென்றார்.

அதேபோன்று, மற்றொரு பரிமாற்றத்தில் டெல்லி அணியின் தமிழக வேகப்பந்து வீச்சாளர் டி. நடராஜன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்குச் சென்ற நிலையில், சன்ரைசர்ஸ் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ஜீஷன் அன்சாரி டெல்லி அணியில் இணைந்தார்.

விதிமுறைகள்

தொடர் தொடங்கும் தேதி

ஐபிஎல் நிர்வாக விதிகளின்படி, சீசன் முடிந்து ஒரு மாதத்திற்குப் பிறகு தொடங்கும் இந்த வீரர் பரிமாற்ற நடவடிக்கைகள், மினி ஏலம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

அதன் பின்னர், ஏலம் முடிவடைந்து அடுத்த சீசன் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு வரை அணிகள் பரஸ்பரம் வீரர்களை மாற்றிக் கொள்ள மீண்டும் வாய்ப்பளிக்கப்படும்.

இதனிடையே, ஐபிஎல் 2027 தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் தொடங்க அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் போட்டிகள் தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ போட்டி அட்டவணையை பிசிசிஐ விரைவில் வெளியிடவுள்ளது.

ADVERTISEMENT