நவம்பர் 6 அன்று திரைக்கு வரும் மூக்குத்தி அம்மன் 2: நயன்தாராவுக்கு 60 அடியில் கட் அவுட்
செய்தி முன்னோட்டம்
இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகை நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் வரும் நவம்பர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகர் சூர்யாவின் சீன் மற்றும் பிரம்மாண்ட திரைப்படமான ராமாயணா ஆகிய படங்களுடன் இப்படம் நேரடியாக மோதும் சூழலில், சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் திரையரங்கில் நயன்தாராவிற்கு 60 அடி உயரத்தில் பிரம்மாண்ட கட் அவுட் நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு நடிகைக்காக வைக்கப்பட்டதிலேயே இதுவே மிக உயரமான கட் அவுட் எனக் கூறப்படும் நிலையில், இது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தெலுங்கு வெளியீடு
பட வெளியீடும் பிரம்மாண்ட விளம்பர உத்தியும்
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெற்றியடைந்த மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தைச் சுந்தர். சி இயக்கியுள்ளார்.
போட்டிப் படங்களுக்கு மத்தியில் கவனத்தை ஈர்க்கும் விளம்பர உத்தியாக 60 அடி உயர கட்-அவுட் அமைக்கப்பட்டு இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.
தெலுங்கில் மகாசக்தி என்ற பெயரில் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் நயன்தாராவுடன் இணைந்து ரெஜினா கசாண்ட்ரா, துனியா விஜய், அஜய் கோஷ், ஊர்வசி, அபிநயா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.
வழக்கமான சுந்தர். சி-யின் நகைச்சுவைப் பாணியில் இப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.