19 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வரும் ஷகீரா - ஏப்ரல் மாதம் மும்பை, டெல்லியில் அதிரடி கச்சேரி
செய்தி முன்னோட்டம்
உலகப்புகழ் பெற்ற பாப் நட்சத்திரம் Shakira, சுமார் 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவிற்கு வரவுள்ளார். 'ஃபீடிங் இந்தியா'(Feeding India) அமைப்பு மற்றும் 'ஜொமேட்டோ டிஸ்ட்ரிக்ட்' (District by Zomato) இணைந்து நடத்தும் இந்த இசை நிகழ்ச்சிகள் ஏப்ரல் மாதம் மும்பை மற்றும் டெல்லியில் நடைபெறவுள்ளன. இணைய செய்திகளின் படி, ஷகீராவின் நிகழ்ச்சி, ஏப்ரல் 10 அன்று மும்பை, மகாலட்சுமி ரேஸ்கோர்ஸ் ஸ்டேடியத்திலும், ஏப்ரல் 15 அன்று டெல்லி, ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திலும் நடைபெறும். கடைசியாக 2007-ஆம் ஆண்டு தனது 'ஓரல் ஃபிக்ஸேஷன்' (Oral Fixation) உலக சுற்றுப்பயணத்திற்காக மும்பை வந்திருந்த ஷகீரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய ரசிகர்களை சந்திக்கவுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Big Breaking 🔔
— Always Bollywood (@AlwaysBollywood) February 20, 2026
Pop icon #Shakira to Return to India After 20 Years✅
She will perform in Mumbai at Mahalaxmi Racecourse and Jawaharlal Nehru Stadium in Delhi. pic.twitter.com/DGaNXT1gIy