LOADING...
இந்தியா வந்தடைந்தார் ரஷ்ய அதிபர் புடின்; விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார் பிரதமர் மோடி

இந்தியா வந்தடைந்தார் ரஷ்ய அதிபர் புடின்; விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார் பிரதமர் மோடி

எழுதியவர் Sekar Chinnappan
Dec 04, 2025
06:56 pm

செய்தி முன்னோட்டம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வியாழக்கிழமை (டிசம்பர் 4) தனது இரண்டு நாள் இந்திய சுற்றுப்பயணத்திற்காக டெல்லி வந்தடைந்தார். பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலையத்திற்கே நேரில் சென்று புடினை வரவேற்றார். இதையடுத்து ரஷ்ய அதிபர் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு இரவு உணவிற்குச் செல்கிறார். வெள்ளிக்கிழமை, அவர் ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்துவார், மேலும் ஜனாதிபதி திரௌபதி முர்முவுடன் ஒரு நிகழ்வில் கலந்து கொள்வார். அவரது வருகை இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே பல வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுவதால், இரு நாடுகளுக்கும் மிக முக்கியமானதாக உள்ளது. ரஷ்யாவின் Su-57 போர் விமானங்கள் மற்றும் எஸ்-500 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை இந்தியாவிற்கு வழங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement