அணுசக்தி: செய்தி
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் அணுசக்தி நிலையங்களை அழிக்கவில்லை என்கிறது அமெரிக்க உளவுத்துறை; கொதித்தெழுந்த டிரம்ப்
ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்ட வான்வழித் தாக்குதல்கள் இரண்டு அணுசக்தி நிலையங்களை முழுமையாக அழிக்கவில்லை என்று ஒரு புதிய அமெரிக்க உளவுத்துறை அறிக்கை கூறியுள்ளது.
அமெரிக்காவை தொடர்ந்து ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி தளத்தைத் தாக்கிய இஸ்ரேல்
அமெரிக்கா, ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி நிலையத்தின் மீது குண்டுவீச்சு நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு, இஸ்ரேல் அதன் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ஈரான் திட்டமிட்டுள்ளது; இதனால் என்ன அச்சுறுத்தல்?ஒப்பந்தம் என்ன கூறுகிறது?
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து (NPT) விலகுவதற்கான மசோதாவை ஈரானிய நாடாளுமன்றம் தயாரித்து வருவதாகவும், எனினும் பேரழிவு ஆயுதங்களை உருவாக்குவதற்கு தெஹ்ரான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் ஈரான் வெளியுறவு அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது.
டிரம்பைக் கொல்ல ஈரான் சதி, அவரை முதல் எதிரியாக கருதுகிறது: இஸ்ரேல் பிரதமர் பகீர் குற்றச்சாட்டு
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், ஈரான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை தனது அணுசக்தி திட்டத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதுவதால் அவரைக் கொல்ல முயற்சிப்பதாகக் கூறினார்.
'எதுவும் மிச்சமில்லாமல் போவதற்கு முன்பு ஒப்பந்தம் போடுங்கள்': ஈரானை எச்சரிக்கும் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை ஈரானை அணுசக்தி ஒப்பந்தத்தை இறுதி செய்யுமாறு எச்சரித்தார்.
அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை
இந்தியா தனது அணுசக்தித் துறையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவருவது குறித்து பரிசீலித்து வருகிறது, வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அரசாங்கம் இரண்டு முக்கிய திருத்தங்களை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.