Loading...
ஐ.நா. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் 8 சர்வதேச தலைவர்கள்
ஐ.நா. சபையின் அடுத்த பொதுச்செயலாளர் பதவிக்கு 8 வேட்பாளர்கள் போட்டி

ஐ.நா. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் 8 சர்வதேச தலைவர்கள்

எழுதியவர் Vasuki
Nov 15, 2026
07:27 pm

செய்தி முன்னோட்டம்

ஐக்கிய நாடுகள் சபையின் தற்போதைய பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் பதவிக்காலம் வரும் 2026-ஆம் ஆண்டு இறுதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், உலகின் மிக உயரிய ராஜதந்திரப் பதவியான 10-வது ஐ.நா. பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இப்பதவிக்காக பல்வேறு நாடுகளால் அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்ட 8 முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர், ஐ.நா. வர்த்தக அமைப்பின் தலைவர், முன்னாள் வெளியுறவு அமைச்சர்கள் என 5 பெண்கள் உட்பட 8 அனுபவமிக்க ஆளுமைகள் போட்டியிடுகின்றனர். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ரகசிய வாக்கெடுப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில், களத்தில் உள்ள அந்த 8 வேட்பாளர்களின் பின்னணி குறித்த முழு விவரம் இதோ:

ஈக்வடார் மற்றும் ஈக்வடார்

இவோன் ஏ-பாகி மற்றும் மரியா பெர்னாண்டா எஸ்பினோசா

அமெரிக்கா, பிரான்ஸ், மொனாக்கோ மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கான ஈக்வடார் தூதராகவும், அந்நாட்டின் அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

2026 ஆகஸ்ட் மாதம் டோங்கா நாட்டால் பரிந்துரைக்கப்பட்ட இவர், மோதல்களைத் தடுத்தல், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலைச் சீர்திருத்துதல் மற்றும் அமைப்பின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்தல் ஆகியவற்றை தனது முக்கியப் பிரச்சாரமாக முன்னெடுத்துள்ளார்.

2018-2019 காலகட்டத்தில் ஐ.நா. பொதுச் சபையின் 73-வது அமர்வின் தலைவராகப் பணியாற்றிய இவர், ஈக்வடாரின் வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

அமைதி மற்றும் பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி, நிறுவனச் சீர்திருத்தம் மற்றும் ஐ.நா.வின் நம்பகத்தன்மையை மீண்டும் கட்டியெழுப்புதல் ஆகியவற்றை மையப்படுத்தி இவர் போட்டியிடுகிறார்.

அர்ஜென்டினா மற்றும்  கோஸ்டாரிகா

ரஃபேல் குரோஸி மற்றும் ரெபேக்கா கிரின்ஸ்பான்

2019-ஆம் ஆண்டு முதல் சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைமை இயக்குநராகப் பணியாற்றி வரும் அர்ஜென்டினா ராஜதந்திரி ஆவார்.

அணுசக்தி ராஜதந்திரம் மற்றும் சர்வதேச நெருக்கடிகளைக் கையாள்வதில் தனக்குள்ள ஆழமான அனுபவத்தை முன்வைத்து, ஐ.நா.வின் தலைமைப் பதவிக்கு இவர் தீவிரமாகக் களமிறங்கியுள்ளார்.

கோஸ்டாரிகா நாட்டின் முன்னாள் துணை அதிபரும், புகழ்பெற்ற பொருளாதார நிபுணருமான இவர், தற்போது ஐ.நா. வர்த்தகம் மற்றும் வளர்ச்சி அமைப்பின் பொதுச்செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

ஐ.நா. மீதான உலக நாடுகளின் நம்பிக்கையை மீட்டெடுத்தல், சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் உலகளாவிய வளர்ச்சிச் சவால்களை எதிர்கொள்ளுதல் ஆகியவற்றை வலியுறுத்தி வருகிறார்.

ADVERTISEMENT

அமீரகம் மற்றும் உகாண்டா

லானா நுசைபே மற்றும் ஒலாரா ஒடுன்னு

ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத் துறை இணை அமைச்சராகப் பணியாற்றி வரும் இவர், முன்னதாக ஐ.நா.வுக்கான அமீரகத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் தூதராகவும் 11 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

2026 அக்டோபரில் அமீரகத்தால் பரிந்துரைக்கப்பட்ட இவர், பன்முக ஒத்துழைப்பு மற்றும் மோதல் தடுப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.

உகாண்டா நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், ஐ.நா.வுக்கான நிரந்தரப் பிரதிநிதியுமான இவர், ஐ.நா.வின் துணைப் பொதுச்செயலாளராகவும், ஆயுத மோதல்களில் குழந்தைகள் நலனுக்கான சிறப்புப் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார்.

உலக அமைதி, பாதுகாப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பில் ஐ.நா.வின் பங்கை வலுப்படுத்த வேண்டும் என இவர் வலியுறுத்துகிறார்.

ADVERTISEMENT

கயானா மற்றும் துருக்கி

கரோலின் பிர்கெட் மற்றும் ஃபெரிதுன் ஹாதி சினிர்லியோக்லு

2020-ஆம் ஆண்டு முதல் ஐ.நா.வுக்கான கயானாவின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றி வரும் இவர், அதற்கு முன்பு கயானாவின் வெளியுறவு அமைச்சர், வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் மற்றும் பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

மனித உரிமைகள், நிலையான வளர்ச்சி மற்றும் ஐ.நா.வின் அடிப்படைக் கொள்கைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.

2024-ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச்செயலாளராகப் பணியாற்றி வரும் துருக்கி ராஜதந்திரி ஆவார்.

முன்னதாகத் துருக்கியின் வெளியுறவு அமைச்சராகவும், ஐ.நா.வுக்கான நிரந்தரப் பிரதிநிதியாகவும் பணியாற்றிய இவர், ஐ.நா. சீர்திருத்தம் மற்றும் சர்வதேச பேச்சுவார்த்தைகள் மூலம் அமைப்பை மேலும் திறம்படச் செயல்பட வைப்பதைத் தனது இலக்காகக் கொண்டுள்ளார்.

ADVERTISEMENT