Loading...
அமெரிக்க தாக்குதல் எச்சரிக்கை: அணு உலை பகுதிகளில் கதிர்வீச்சு எதிர்ப்பு மாத்திரைகளை வழங்கும் ஈரான்
அமெரிக்க தாக்குதல் அச்சுறுத்தலால் மக்களுக்கு கதிர்வீச்சு எதிர்ப்பு மாத்திரைகளை ஈரான் அரசு வழங்குகிறது.

அமெரிக்க தாக்குதல் எச்சரிக்கை: அணு உலை பகுதிகளில் கதிர்வீச்சு எதிர்ப்பு மாத்திரைகளை வழங்கும் ஈரான்

எழுதியவர் Vasuki
Nov 07, 2026
05:52 pm

செய்தி முன்னோட்டம்

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மீண்டும் நேரடித் தாக்குதல்களைத் தொடுக்கக்கூடும் என்ற அச்சம் சர்வதேச அளவில் அதிகரித்துள்ள நிலையில், தங்கள் நாட்டு அணுசக்தி நிலையங்களைச் சுற்றி வசிக்கும் பொதுமக்களுக்குக் கதிர்வீச்சு எதிர்ப்பு அயோடின் மாத்திரைகளை ஈரான் சுகாதார அமைச்சகம் தீவிரமாக வழங்கி வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது தேசியப் பாதுகாப்புக் குழுவுடன் வெள்ளை மாளிகையில் அவசர ஆலோசனைகளை மேற்கொண்டுள்ள சூழலில், அணு உலைகள் மீதான தாக்குதலில் கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டால் பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் இந்த அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஈரான் எடுத்துள்ளது.

ட்ரம்ப் எச்சரிக்கை

அயோடின் மாத்திரைகள் விநியோகம்

அணு உலைகளிலிருந்து 2 முதல் 3 கி.மீ சுற்றளவில் வசிக்கும் பொதுமக்களுக்கு அயோடின் மாத்திரைகள் விநியோகிக்கப்படுவதை ஈரான் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்பை இனி நம்ப முடியாது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதனிடையே ஓவல் அலுவலகத்தில் பேசிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "ஈரானின் எஞ்சிய பகுதிகளை அழிக்க நான் விரும்பவில்லை. ஆனால் அதற்கான சூழல் ஏற்பட்டால் நிச்சயம் செய்ய வேண்டியிருக்கும்" என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளது பதற்றத்தை மேலும் எகிறச் செய்துள்ளது.

குறிப்பாக பலத்த பாதுகாப்பு கொண்ட பிகாக்ஸ் மவுண்டன் (Pickaxe Mountain) அணுசக்தி தளம் மீது அமெரிக்கா குறிவைக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈராக்கின் எச்சரிக்கை

தயார்நிலையில் அமெரிக்க ராணுவம்

அமெரிக்காவின் மத்தியக் கட்டளைப் பிரிவு (CENTCOM) ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளை இறுதி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில், அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தத் தங்கள் நாட்டு வான்வெளியையோ அல்லது நிலப்பரப்பையோ அமெரிக்கப் படைகள் பயன்படுத்தக் கூடாது என்று ஈராக் பிரதமர் அலி ஃபாலே அல்-சைதி, அதிபர் ட்ரம்புடன் தொலைபேசியில் பேசியபோது கண்டிப்புடன் வலியுறுத்தியுள்ளார்.

அமாவாசை இருளைப் பயன்படுத்தித் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற கணிப்புகளுக்கு மத்தியில், மத்தியக் கிழக்கு மீண்டும் ஒரு தீவிரப் போர் சூழலை நோக்கி நகர்ந்து வருகிறது.

ADVERTISEMENT