Loading...
22 வருஷத்துக்கு மீண்டும் அதே டைட்டில்; கமல்ஹாசனின் 'சண்டியர்' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
கமல்ஹாசனின் 'சண்டியர்' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

22 வருஷத்துக்கு மீண்டும் அதே டைட்டில்; கமல்ஹாசனின் 'சண்டியர்' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

எழுதியவர் Sekar Chinnappan
Nov 06, 2026
07:42 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் தனது 72-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக புதிய திரைப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் அருண் குமாருடன் இணைந்துள்ள இந்த புதிய திரைப்படத்திற்கு அதிகாரப்பூர்வமாக 'சண்டியர்' (Sandiyar) எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் துப்பாக்கியுடன் கமல்ஹாசன் மிரட்டலான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

22 ஆண்டுகள்

22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயிர் பெற்ற தலைப்பு

கடந்த 2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி நடித்த 'விருமாண்டி' திரைப்படத்திற்கு முதன்முதலில் 'சண்டியர்' என்ற தலைப்பே வைக்கப்பட்டது.

ஆனால் சில அரசியல் அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பு காரணங்களால் அந்த காலத்தில் பெயர் மாற்றப்பட்டது.

தற்போது 22 ஆண்டுகளுக்குப் பிறகு அதே கம்பீரமான 'சண்டியர்' தலைப்பைத் தனது 237-வது திரைப்படத்திற்கு பயன்படுத்தி திரையுலகில் மீண்டும் ஒரு புதிய பரபரப்பை கமல்ஹாசன் ஏற்படுத்தியுள்ளார்.

படக்குழு

பிரமாண்ட கூட்டணியில் இணையவிருக்கும் முன்னணித் தொழில்நுட்பக் கலைஞர்கள்

இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ள நிலையில், 'விக்ரம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது.

மேலும் பிரபல சண்டைப்பயிற்சி இயக்குநர்களான அன்பறிவ் இரட்டையர்கள் படத்தின் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க உள்ளனர்.

மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்த படம் எந்தவித செயற்கை சிஜிஐ மாற்றங்களும் இன்றி எதார்த்தமான கிராமத்து ஆக்ஷன் கதையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

படத்தில் இடம்பெறும் இதர நடிகர் நடிகையர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT