Loading...
லாபத்தில் 66% சரிவு; எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு பலத்த அடி கொடுத்த வளைகுடா போர்
எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு பலத்த அடி கொடுத்த வளைகுடா போர்

லாபத்தில் 66% சரிவு; எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு பலத்த அடி கொடுத்த வளைகுடா போர்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 05, 2026
07:19 pm

செய்தி முன்னோட்டம்

2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் எமிரேட்ஸ் குழுமத்தின் வரிக்கு முந்தைய லாபம் 66% சரிந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாணயத்தின்படி, 4.1 பில்லியன் திர்காம் ($1.1 பில்லியன்) ஆகக் குறைந்துள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்ட ராணுவ மோதல்கள் மற்றும் விமானப் போக்குவரத்து தடைகள் நிறுவனத்தின் செயல்பாட்டைப் பெரிதும் பாதித்தன. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 75.4 பில்லியன் திர்கானாக இருந்த குழுமத்தின் மொத்த வருவாய் இம்முறை 12% சரிந்து AED 66.2 பில்லியன் திர்கானாகக் குறைந்துள்ளது.

சேவை மீட்பு

பயணிகள் போக்குவரத்துப் பாதிப்பும் 91% சேவைகள் மீட்டமைப்பும்

வான்வெளி மண்டலக் கட்டுப்பாடுகள் மற்றும் ரத்து செய்யப்பட்ட விமான அட்டவணைகள் காரணமாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் 21.8 மில்லியன் பயணிகளை மட்டுமே ஏற்றிச் சென்றது.

இது முந்தைய ஆண்டை விட 22% குறைவான எண்ணிக்கை ஆகும்.

இருப்பினும் செப்டம்பர் மாத இறுதியிற்குள் எமிரேட்ஸ் நிறுவனம் தடைகளுக்கு முந்தைய தனது 91% சர்வதேச விமானப் போக்குவரத்து நெட்வொர்க்கை மீட்டு, 78 நாடுகளில் உள்ள 150 விமான நிலையங்களுக்கு சேவைகளை மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டுவந்தது.

ஹெட்ஜிங் உத்திகள்

லாப சரிவைத் தாங்கிய எமிரேட்ஸ் ஸ்கைகார்கோ மற்றும் ஹெட்ஜிங் உத்திகள்

சர்வதேச அளவில் ஜெட் எரிபொருள் விலை இரட்டிப்பானபோதிலும், எமிரேட்ஸ் நிறுவனத்தின் சரக்கு சேவை பிரிவு 52% வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்து குழுமத்திற்குப் பெரும் ஆதரவாக அமைந்தது.

செங்கடல் மற்றும் வளைகுடாப் பகுதியில் கடல்வழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், வர்த்தக நிறுவனங்கள் வான்வழி சரக்கு சேவையை அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கின.

மேலும் ஹெட்ஜிங் உத்திகள் மூலம் பெற்ற 7.1 பில்லியன் திர்காம் ஆதாயத்தால் நிகர எரிபொருள் செலவு உயர்வு 13% ஆகக் கட்டுப்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

பண இருப்பு நிலை

டினாட்டா பிரிவின் வீழ்ச்சியும் எமிரேட்ஸ் குழுமத்தின் பண இருப்பு நிலையும்

குழுமத்தின் தரைவழிச் சேவை மற்றும் விமான சேவை துணை நிறுவனமான டினாட்டா, யுஏஇ மற்றும் பிரிட்டன் சந்தைகளில் நிலவிய மந்தநிலையால் 51% குறைவான லாபத்தையே (410 மில்லியன் திர்காம்) பதிவு செய்தது.

சவாலான நிதிநிலை நிலவியபோதிலும், செப்டம்பர் 30 நிலவரப்படி எமிரேட்ஸ் குழுமம் 54.1 பில்லியன் திர்காம் என்ற உறுதியான ரொக்க இருப்பைக் கொண்டுள்ளதைக் சுட்டிக்காட்டியுள்ளது.

எமிரேட்ஸ் குழுமத்தின் தலைவர் ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம், நிறுவனத்தின் எதிர்கால விமான விரிவாக்கத் திட்டங்கள் தொய்வின்றித் தொடரும் என உறுதி அளித்துள்ளார்.

ADVERTISEMENT