"ரஷ்யா, சீனாவுடன் சேர்த்து பாகிஸ்தானும் அமெரிக்காவிற்கு எதிராக ஏவுகணைகளை தயார் செய்கிறது": அமெரிக்க உளவுத்துறை இயக்குநர்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தலைவரான துளசி கப்பார்ட், உலக நாடுகளிடமிருந்து அமெரிக்காவிற்கு எதிராக வளர்ந்து வரும் அணுசக்தி அச்சுறுத்தல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக ரஷ்யா, சீனா, வடகொரியா ஆகிய நாடுகளுடன் பாகிஸ்தானையும் மிக முக்கியமான அணுசக்தி அச்சுறுத்தலாக அவர் பட்டியலிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் வாஷிங்டனில் நடைபெற்ற அமைதி உச்சிமாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், டொனால்ட் ட்ரம்ப்பை "அமைதி விரும்பி" என்றும் "தெற்காசியாவின் இரட்சகர்" என்றும் புகழ்ந்து பேசியிருந்தார். ஆனால், அத்தகைய புகழ்ச்சிகளுக்கு மத்தியிலும், பாகிஸ்தானை ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலாகவே அமெரிக்க உளவுத்துறை பார்ப்பதை துளசி கப்பார்ட்டின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
அச்சுறுத்தல்
ஏவுகணை அச்சுறுத்தல் 5 மடங்கு உயரும்
துளசி கப்பார்ட் சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது அமெரிக்காவைத் தாக்கக்கூடிய திறன் கொண்ட ஏவுகணைகளின் எண்ணிக்கை சுமார் 3,000 ஆக உள்ளது. இது வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் 16,000-ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகொரியா தனது ராணுவ உறவை ரஷ்யா மற்றும் சீனாவுடன் வலுப்படுத்தி வருவது அமெரிக்காவிற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. உலகளாவிய ஆயுதப் பெருக்கம் மற்றும் பிராந்திய மோதல்கள் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்க உளவுத்துறையின் இந்த மதிப்பீடு சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
THE US NOW FLAGS PAKISTAN AS A NUCLEAR THREAT
— Nabila Jamal (@nabilajamal_) March 18, 2026
Tulsi Gabbard puts Pakistan in the top tier of nuclear threats to the US homeland
Says Pakistan is actively working on advanced missile delivery systems capable of carrying nuclear warheads over long ranges
US intel assessment:… pic.twitter.com/0AOq4TJILZ
ஈரான்
ஈரான் குறித்த தற்போதைய நிலை
கடந்த ஜூன் 2025-ல் நடத்தப்பட்ட அதிரடி தாக்குதல்கள் மூலம் ஈரானின் அணுசக்தி திட்டம் "முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டதாக" துளசி கப்பார்ட் தெரிவித்தார். இருப்பினும், ஈரானிய ஆட்சியும் அதன் ஆதரவுப் படைகளும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகளுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாகவே உள்ளனர். ஈரானின் தற்போதைய ஆட்சி தொடர்ந்தால், மீண்டும் தனது ஏவுகணை மற்றும் ட்ரோன் பலத்தை பெருக்க அவர்கள் பல ஆண்டுகள் தீவிர முயற்சி எடுப்பார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.