LOADING...
"அவர் வீடு மீதே தாக்குதலா?": அதிபர் புடினின் இல்லத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் குறித்து டிரம்ப் காட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்

"அவர் வீடு மீதே தாக்குதலா?": அதிபர் புடினின் இல்லத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் குறித்து டிரம்ப் காட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 30, 2025
08:40 am

செய்தி முன்னோட்டம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் இல்லத்தை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் விவகாரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் பேசியபோது, தனது இல்லத்தின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக புடின் தெரிவித்ததாக டிரம்ப் கூறியுள்ளார். புளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "யார் இதைப் பற்றி என்னிடம் சொன்னார்கள் தெரியுமா? அதிபர் புடின் தான். அதிகாலையிலேயே அவர் என்னிடம் பேசினார். அவர் வீட்டு மீதே தாக்குதல் நடத்துவது முறையல்ல, இது எனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகிறது" என்று தெரிவித்தார்.

குற்றச்சாட்டு

ட்ரோன் தாக்குதல் நடந்ததாக ரஷ்யாவின் குற்றச்சாட்டு

ரஷ்யாவின் நாவ்கோரோட் (Novgorod) பகுதியில் உள்ள புடினின் இல்லத்தை குறிவைத்து, டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் உக்ரைன் சுமார் 91 ட்ரோன்களை ஏவித் தாக்குதல் நடத்த முயன்றதாகவும், அவை அனைத்தும் முறியடிக்கப்பட்டதாகவும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றம் சாட்டியுள்ளார்.

மறுப்பு

குற்றசாட்டுகளை மறுக்கும் உக்ரைன்

ரஷ்யாவின் இந்தக் குற்றச்சாட்டுகளை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முற்றிலுமாக மறுத்துள்ளார். "இது ரஷ்யாவின் மற்றொரு பொய்ப் பிரசாரம்" என்று அவர் சாடியுள்ளார். "இந்த 'குடியிருப்பு தாக்குதல்' என்று கூறப்படும் கதை, கியேவ் உட்பட உக்ரைனுக்கு எதிரான கூடுதல் தாக்குதல்களையும், போரை முடிவுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுக்க ரஷ்யாவின் சொந்த மறுப்பையும் நியாயப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட முழுமையான புனைகதையாகும். வழக்கமான ரஷ்ய பொய்கள். மேலும், ரஷ்யர்கள் ஏற்கனவே கடந்த காலங்களில் கியேவை குறிவைத்துள்ளனர், இதில் அமைச்சர்கள் குழுவின் கட்டிடம் அடங்கும்" என்றும் உக்ரைன் அதிபர் தனது பதிவில் தெரிவித்தார்.

Advertisement

பின்னடைவு

அமைதிப் பேச்சுவார்த்தையில் பின்னடைவு

உக்ரைன் - ரஷ்யா இடையே அமைதி ஏற்படுத்த டிரம்ப் முயற்சித்து வரும் வேளையில், இந்தத் தாக்குதல் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "இது போன்ற செயல்களில் ஈடுபட இது சரியான நேரமல்ல" என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

Advertisement