LOADING...
அமெரிக்கத் தடைக்குப் பின் ரஷ்யாவின் யுரல்ஸ் கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு அதிக தள்ளுபடியில் விற்பனை
அமெரிக்கத் தடைக்குப் பின் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு அதிக தள்ளுபடியில் விற்பனை

அமெரிக்கத் தடைக்குப் பின் ரஷ்யாவின் யுரல்ஸ் கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு அதிக தள்ளுபடியில் விற்பனை

எழுதியவர் Sekar Chinnappan
Nov 24, 2025
03:16 pm

செய்தி முன்னோட்டம்

ரஷ்யாவின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லூக்கோயில் (Lukoil) மீது அமெரிக்கா விதித்த தடைகளைத் தொடர்ந்து, ரஷ்யாவின் யுரல்ஸ் (Urals) கச்சா எண்ணெய் இந்தியச் சுத்திகரிப்பு ஆலைகளுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. தற்போதைய நிலவரப்படி, யுரல்ஸ் கச்சா எண்ணெயின் விலை, சர்வதேச அளவுகோலான டேட்டட் பிரென்ட்டை (Dated Brent) விட ஒரு பீப்பாய்க்கு $7 வரை தள்ளுபடியில் வழங்கப்படுகிறது. இந்தச் சலுகை டிசம்பரில் ஏற்றப்பட்டு ஜனவரியில் இந்தியாவை வந்தடையும் சரக்குகளுக்கானதாகும் என்று விவகாரத்தை அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். 2022ஆம் ஆண்டு உக்ரைன் மீதான படையெடுப்புக்குப் பிறகு, இந்தியா குறைந்த விலையில் ரஷ்ய எண்ணெயை வாங்கி லாபம் ஈட்டியது.

தடை

அமெரிக்காவின் தடை

ஆனால், சமீபத்தில் ரோஸ்நெஃப்ட் மற்றும் லூக்கோயில் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்ததால், பெரும்பாலான இந்தியச் சுத்திகரிப்பு ஆலைகள் ரஷ்ய எண்ணெய்க்கான ஆர்டர்களை வழங்குவதைத் தவிர்த்தன. எனினும், யுரல்ஸ் கச்சா எண்ணெயின் விலை திடீரெனக் கணிசமாகக் குறைந்ததால், இந்தியச் சுத்திகரிப்பு ஆலைகளின் அணுகுமுறை மாறியுள்ளது. தடை செய்யப்படாத விற்பனையாளர்களிடமிருந்து ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்குச் சில சுத்திகரிப்பு ஆலைகள் தற்போதுத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தடைகளுக்கு முன்னர், யுரல்ஸ் எண்ணெயின் தள்ளுபடி சுமார் ஒரு பீப்பாய்க்கு $3 என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, இந்தியச் சுத்திகரிப்பு ஆலைகள் தற்போது மத்திய கிழக்கு நாடுகள் உட்பட மற்றப் பகுதிகளிலிருந்து அதிக கச்சா எண்ணெயை வாங்கத் தொடங்கியுள்ளன.