புடின் வருகை: ரஷ்யாவிடமிருந்து போர் விமானங்கள், ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்க இந்தியா திட்டம்
செய்தி முன்னோட்டம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த வாரம் இந்தியாவுக்கு வரவிருக்கும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்குவது குறித்து இந்தியா விவாதிக்கத் திட்டமிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் ஆயுத ஒப்பந்தங்களைக் குறைக்க வலியுறுத்தி வரும் போதிலும், இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்தியா - ரஷ்யா இடையேயான சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாயக் கூட்டாண்மையின் கீழ், ரஷ்யாவின் அதிநவீன Su-57 போர் விமானங்கள் மற்றும் மேம்பட்ட S-500 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தகம்
வர்த்தக சிக்கல்
இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை உள்ளதால், இது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தக உறவுகளைச் சிக்கலாக்கலாம். இருப்பினும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவுடன் வலுவான உறவுகளை வளர்த்துக் கொள்ளும் அதே வேளையில், ரஷ்யாவுடனான இந்தியாவின் நீண்டகால உறவுகளைத் தொடர்ந்து பேணி வருகிறார். கடந்த ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்து அதிக ஆயுதங்களை இந்தியா வாங்கினாலும், ரஷ்யாவே இந்திய ராணுவ தளவாடங்களின் மிகப்பெரிய சப்ளையராகத் தொடர்கிறது. இந்தியப் பாதுகாப்புத் துறைச் செயலர் ராஜேஷ் குமார் சிங், இந்தியா ரஷ்யாவுடனான தனது பாதுகாப்பு ஒத்துழைப்பை இப்போதைக்கு நிறுத்த விரும்பவில்லை என்றும், தொடர்ந்து இரண்டு நாடுகளிடமிருந்தும் ஆயுதங்களை வாங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.