LOADING...
காசா அமைதி ஒப்பந்தத்திற்கு டிரம்ப் மற்றும் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடிய மோடி 
இரு தலைவர்களுடனும் தொலைபேசியில் உரையாடி வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி

காசா அமைதி ஒப்பந்தத்திற்கு டிரம்ப் மற்றும் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடிய மோடி 

எழுதியவர் Venkatalakshmi V
Oct 10, 2025
09:28 am

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இரு தலைவர்களுடனும் தொலைபேசியில் உரையாடி, இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான காசா போரை முடிவுக்கு கொண்டு வரும் அமைதித் திட்டத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த உரையாடல் முக்கியமாக காசா அமைதித் திட்டம் மற்றும் இந்தியா-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்து அமைந்தது.

டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்புடனான பேச்சு

பிரதமர் மோடி வியாழக்கிழமை அன்று, 2 ஆண்டு கால போரை முடிவுக்குக் கொண்டுவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க காசா அமைதித் திட்டத்தின் வெற்றிக்காக டிரம்ப்பை வாழ்த்திப் பாராட்டினார். இந்த உரையாடலின் போது, புது டெல்லி மற்றும் வாஷிங்டன் இடையே நிலுவையில் உள்ள வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட நல்ல முன்னேற்றத்தையும் இருவரும் மதிப்பாய்வு செய்தனர் என இந்தியா டுடே செய்தி தெறிவிக்கிறது. அதோடு, வரும் வாரங்களில் நெருங்கிய தொடர்பில் இருக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடனான பேச்சு

டிரம்பிடம் பேசிய உடனே பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, டிரம்ப்பின் காசா அமைதித் திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்காக வாழ்த்து தெரிவித்தார். இஸ்ரேலிய பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையின்படி, "அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டதற்கு, மோடி நெதன்யாகுவை வாழ்த்தினார். காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தையும் அவர் வரவேற்றார்". இந்த உரையாடலின் போது, "பயங்கரவாதம் எந்த வடிவத்திலும் அல்லது வெளிப்பாட்டிலும் உலகில் எங்கும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்பதை பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார். பிரதமர் மோடியிடம் பேசியது குறித்து தெரிவித்த நெதன்யாகு, இந்திய பிரதமர், எப்போதும் நெருங்கிய நண்பராக இருந்து வருகிறார் என்றும், தங்கள் நட்பு வலுவாக இருக்கும் என்று வலியுறுத்தியதாகவும் கூறினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post