
போர் நிறுத்தத்தை மீறி ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்; பேச்சுவார்த்தை திட்டமிட்டப்படி நடக்காது என தகவல்
செய்தி முன்னோட்டம்
48 மணி நேரத் தற்காலிக போர் நிறுத்தத்தை நீட்டிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட சில மணி நேரங்களிலேயே, பாகிஸ்தான் மீண்டும் ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தின் பல மாவட்டங்களைத் தாக்கி புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது என்று டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள், சர்ச்சைக்குரிய டூராண்ட் கோட்டில் அமைந்துள்ள அர்குன் மற்றும் பர்மல் மாவட்டங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வான்வழித் தாக்குதல்களால் ஏற்பட்ட உயிர்ச் சேதம் குறித்த உறுதியான தகவல் எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், பாகிஸ்தானின் தாக்குதல்களைத் தொடர்ந்து ஒரு மூத்த தாலிபான் அதிகாரி உடனடியாகப் போர் நிறுத்தம் முறிந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை
கத்தாரில் திட்டமிடப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தை
பதட்டங்களைத் தணிக்கும் நோக்கத்துடன் ராஜதந்திர முயற்சிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இந்த மோதல் அதிகரித்திருப்பது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தூதுக்குழு ஏற்கனவே கத்தார் தலைநகர் தோஹாவிற்கு பேச்சுவார்த்தைக்காக ஏற்கனவே சென்றிருந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தூதுக்குழு சனிக்கிழமை (அக்டோபர் 18) அன்று அவர்களுடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட போர் நிறுத்தம், இந்தப் பேச்சுவார்த்தைகள் முடியும் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த புதிய தாக்குதல்கள் நிலைமையை மீண்டும் மோசமாக்கியுள்ளது. மோதல் அதிகரித்து வரும் இந்தச் சூழலில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்து, இனி ஆபாகிஸ்தானுடன் முன்பு இருந்ததைப் போல உறவைப் பேண முடியாது என்று கூறினார்.