LOADING...
மாநிலங்களவை தேர்தல்: தேமுதிக வேட்பாளராக டெல்லி செல்கிறார் எல்.கே. சுதீஷ்
மாநிலங்களவை வேட்பாளராக டெல்லி செல்கிறார் எல்.கே. சுதீஷ்

மாநிலங்களவை தேர்தல்: தேமுதிக வேட்பாளராக டெல்லி செல்கிறார் எல்.கே. சுதீஷ்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 05, 2026
10:49 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக-வுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு தேமுதிக-வின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் சகோதரரும், கட்சியின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினருமான எல்.கே. சுதீஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16-ல் தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், தேமுதிக-வுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு எல்.கே. சுதீஷ் போட்டியிடுகிறார். திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் ஏற்கனவே வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

விவரங்கள்

யார் இந்த எல்.கே. சுதீஷ்?

தேமுதிக-வின் நிறுவன தலைவர் விஜயகாந்தின் மைத்துனரான எல்.கே. சுதீஷ், கட்சியின் தொடக்க காலத்திலிருந்தே முக்கியப் பங்காற்றி வருபவர். கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் மற்றும் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த இவர், விஜயகாந்தின் நம்பிக்கைக்குரிய நிழலாகப் பார்க்கப்பட்டவர். தற்போது பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கட்சி இயங்கி வரும் சூழலில், சுதீஷ் மாநிலங்களவைக்கு செல்வது தேமுதிக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணி

கூட்டணி பலம்

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைப் படி, திமுக கூட்டணிக்கு 4 இடங்கள் உறுதியாகக் கிடைக்கும். இதில் திமுக 2 இடங்களிலும், காங்கிரஸ் மற்றும் தேமுதிக தலா 1 இடத்திலும் போட்டியிடுகின்றன. அதிமுக சார்பில் தம்பிதுரை வேட்பாளராகக் களமிறங்குகிறார். அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக சார்பாக அன்புமணி ராமதாஸ் மறுபடியும் ராஜ்ய சபா MP தேர்தலுக்கு போட்டியிடுகிறார். வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைவதால், தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.

Advertisement