டெஹ்ரானின் தெருக்களில் இஸ்ரேலிய கண்கள்! கமேனி கொல்லப்பட்டதன் பின்னணியில் 'ஹேக்கிங்' மர்மம்
செய்தி முன்னோட்டம்
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீதான தாக்குதலுக்கு முன்னதாக, இஸ்ரேல் அந்நாட்டின் போக்குவரத்து கேமராக்கள் மற்றும் மொபைல் நெட்வொர்க்குகளை ஹேக் செய்து தீவிரமாக கண்காணித்து வந்ததாக Financial Times இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. உளவுத்துறை அதிகாரிகளின் தகவல்படி, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து போக்குவரத்து கேமராக்களையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தது. இதிலிருந்து பெறப்பட்ட நேரடி காட்சிகள் ரகசியமாக என்க்ரிப்ட் (Encrypt) செய்யப்பட்டு, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள சர்வர்களுக்கே நேரடியாக அனுப்பப்பட்டுள்ளன. இதன் மூலம் கமேனியின் மெய்க்காப்பாளர்கள் எங்கு வாகனங்களை நிறுத்துகிறார்கள், அவர்களது தினசரி நடைமுறைகள் என்ன என்பது போன்ற நுணுக்கமான தகவல்களை இஸ்ரேல் சேகரித்துள்ளது.
நேரம்
60 வினாடிகளில் முடிந்த தாக்குதல்
முதலில் இரவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்த தாக்குதல், பின்னர் பகல் நேரத்திற்கு மாற்றப்பட்டது. கமேனி மற்றும் 40-க்கும் மேற்பட்ட உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் சனிக்கிழமை காலை டெஹ்ரானில் உள்ள ஒரு வளாகத்தில் சந்திப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டது. இஸ்ரேலிய போர் விமானங்கள் ஏவிய நவீன ரக ஏவுகணைகள், வெறும் 60 வினாடிகளுக்குள் மூன்று முக்கிய இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கின. இதில் 86 வயதான கமேனி மற்றும் ஈரானிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தலைவர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். பகல் நேரத்தில் இத்தகைய தாக்குதலை ஈரான் எதிர்பார்க்காது என்பதால், அந்த தருணத்தை இஸ்ரேல் தேர்ந்தெடுத்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.