LOADING...
இன்றும் குறைந்தது தங்கத்தின் விலை; ஒரு சவரன் விலை என்ன?
இன்றும் குறைந்தது தங்கத்தின் விலை

இன்றும் குறைந்தது தங்கத்தின் விலை; ஒரு சவரன் விலை என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Mar 03, 2026
10:43 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, செவ்வாய்கிழமை (மார்ச் 3) குறைந்துள்ளது. செவ்வாய்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹10 குறைந்து ₹15,650 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹80 குறைந்து ₹1,25,200 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹11 குறைந்து ₹17,073 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹88 குறைந்து ₹1,36,584 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை நிலவரம்

18 காரட் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, மாற்றமின்றி தற்போது ஒரு கிராம் ₹13,400 ஆகவும், ஒரு சவரன் ₹1,07,200 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே செவ்வாய்கிழமை வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹20 குறைந்து ₹295.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,95,000 ஆகவும் விற்பனை ஆகிறது. சமீப காலமாக தங்கம் வெள்ளி விலையில் பெரிய அளவில் மாற்றமில்லாமல் இருந்தாலும், சர்வதேச அரசியல் சூழல்களால் மீண்டும் நிலையற்ற தன்மை ஏற்படலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement