LOADING...
டிரம்ப் நிறுத்தியதாக கூறிய தாய்லாந்து- கம்போடியா போர்: மீண்டும் துவங்கிய தாக்குதல்
மீண்டும் துவங்கிய தாய்லாந்து - கம்போடியா எல்லை போர்!

டிரம்ப் நிறுத்தியதாக கூறிய தாய்லாந்து- கம்போடியா போர்: மீண்டும் துவங்கிய தாக்குதல்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 08, 2025
08:53 am

செய்தி முன்னோட்டம்

எல்லை பகுதியில் ராணுவ அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாக கூறி, கம்போடிய எல்லையில் தாய்லாந்து ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அண்மையில் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட போதிலும், இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தற்போது மீண்டும் உச்சமடைந்துள்ளது. இரு நாடுகளும் ஒருவரையொருவர் போர்நிறுத்தத்தை மீறியதாகக் குற்றம் சாட்டி வருகின்றன. தாய்லாந்து ராணுவம், கம்போடியா "தெளிவான அச்சுறுத்தல்களை" ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளது. அதேசமயம், கம்போடியா தரப்பு, தாய்லாந்து படைகளே முதலில் தாக்குதலை தொடங்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இரு தரப்பிலும் பீரங்கி குண்டுகள் மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக News18 செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு நாடுகளுடன் பேசி சமரசம் செய்ததாக கூறிய நிலையில் தற்போது மீண்டும் போர் வெடித்துள்ளது.

உயிரிழப்புகள்

உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள்

இந்த மோதலில் தாய்லாந்து ராணுவ வீரர் ஒருவர் உயிரழந்ததாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் அந்த செய்தி தெறிவிக்கிறது. போர் பதற்றத்தால் இதுவரை 1,00,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். தாய்லாந்து ராணுவம், கம்போடியாவின் ராணுவ நிலைகளை இலக்கு வைத்து F-16 ரக போர் விமானங்களை பயன்படுத்தி வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் எல்லை பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த மோதல், பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஐ.நா. சபை உடனடியாக அமைதி காக்குமாறும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்குமாறும் இரு நாடுகளையும் வலியுறுத்தியுள்ளது. இரு நாடுகளும் தங்கள் தூதர்களை திரும்ப அழைத்துக் கொண்டதோடு, தூதரக உறவுகளையும் துண்டித்துள்ளன.

Advertisement