பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே வெடித்தது எல்லை போர்; இரு தரப்பிலும் தொடங்கிய வான்வழி தாக்குதல்கள்
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் (தாலிபான் அரசு) இடையே பல மாதங்களாக நீடித்து வந்த எல்லை பிரச்சனை தற்போது நேரடி ராணுவ மோதலாக உருவெடுத்துள்ளது. பிப்ரவரி 26 அன்று இரவு தொடங்கிய இந்த மோதலில் இரு நாடுகளும் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளதாக கூறி வருகின்றன. ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, தலிபான் படைகள் எல்லையெங்கும் ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தின. இதில் பாகிஸ்தானின் 55 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 2 ராணுவத் தளங்கள் மற்றும் 19 சோதனை சாவடிகளை கைப்பற்றியதாகவும் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். மேலும், சில பாகிஸ்தான் வீரர்களை உயிருடன் சிறைபிடித்துள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் உரிமை கோரியுள்ளது.e
மறுப்பு
பாகிஸ்தான் தரப்பு மறுப்பு
தலிபான்களின் இந்தத் தகவலை பாகிஸ்தான் முற்றிலுமாக மறுத்துள்ளது. பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் கூறுகையில், தலிபான் தரப்பில் 133 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் தரப்பில் 2 வீரர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். "ஆபரேஷன் கசாப் லில்-ஹக்" (Operation Ghazab lil-Haq) என்ற பெயரில் பாகிஸ்தான் விமானப்படை காபூல், காந்தகார் மற்றும் பக்திகா ஆகிய பகுதிகளில் உள்ள தலிபான் ராணுவ நிலைகளை தாக்கி அழித்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
விவரங்கள்
தற்போதைய நிலை
வெள்ளிக்கிழமை அதிகாலை காபூல் நகரில் பலத்த வெடிகுண்டு சத்தங்களும், போர் விமானங்களின் சத்தமும் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். Torkham எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 2,611 கிலோமீட்டர் நீளம் கொண்ட டியூரண்ட் கோடு எல்லை பகுதியை ஆப்கானிஸ்தான் இதுவரை அங்கீகரிக்காததே இந்த நீண்டகால பகைக்கு முக்கிய காரணமாகும். இரு நாடுகளும் அணு ஆயுத பலம் மற்றும் நவீன ராணுவத்தை கொண்டுள்ளதால், இந்த மோதல் ஒரு முழுமையான போராக மாறுமோ என்ற அச்சம் சர்வதேச சமூகத்திடையே எழுந்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Afghan govt says in its retaliatory strikes, 55 Pakistani soldiers were killed, and 19 Pakistan outposts were captured/conquered. pic.twitter.com/ZxSluQUlMh
— Sidhant Sibal (@sidhant) February 26, 2026