
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுக நிதியுதவி: அமெரிக்கா குற்றச்சாட்டு
செய்தி முன்னோட்டம்
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுகமாக நிதியுதவி செய்து வருவதாக அமெரிக்கா கடும் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் எண்ணெய் மற்றும் ராணுவ உபகரணங்களை வாங்குவது தான் இந்த நிதியுதவிக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மீது 25% வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ள நிலையில் இத்தகைய கருத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. டிரம்ப் அரசாங்கம் வைத்துள்ள இந்த வரி ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் அமலில் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய்
ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி
அமெரிக்காவின் இந்த வரி தீர்மானத்திற்கு பின்னர், இந்தியா தனது எண்ணெய் கொள்முதல் அளவை குறைத்ததாக தகவல்கள் வெளியான நிலையில், மத்திய அரசு அதனை முற்றிலும் மறுத்துள்ளது. வழக்கம் போலவே ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், டிரம்பின் மூத்த ஆலோசகர் ஸ்டீபன் மில்லர், "இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைனுக்கு எதிரான போருக்கே நிதி வழங்கி வருகிறது. இது ஏற்க முடியாத நிலை. ரஷ்யா-இந்தியா எண்ணெய் உறவு, சீனாவை போன்று நெருக்கமாக உள்ளது என்பதே இங்கு அதிர்ச்சியளிக்கும் உண்மை" எனக் கூறியுள்ளார்.