LOADING...
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்: 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் முன்கூட்டியே தொடக்கம்?
இறுதி தேர்வுகளை ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் முடிக்க திட்டம்

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்: 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் முன்கூட்டியே தொடக்கம்?

எழுதியவர் Venkatalakshmi V
Mar 03, 2026
09:32 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்குவதைக் கருத்தில் கொண்டு, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகளை ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இவை மார்ச் 26-ஆம் தேதியுடனும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 6-ஆம் தேதியுடனும் நிறைவடைகின்றன. வழக்கமாக 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு பிறகே தேர்வுகள் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதால், தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்படவுள்ளன.

விளக்கம்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

இது குறித்து நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது: "தேர்தல் வாக்குச் சாவடிகள் பெரும்பாலும் பள்ளிகளிலேயே அமைக்கப்படுவதால், மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்வுகளை முன்கூட்டியே நடத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் தேர்வுகளை நடத்தி முடித்துவிட்டு, விடுமுறை அளிக்கப்படும்." இவை பொதுத்தேர்வுகள் இல்லை என்பதால், அந்தந்த மாவட்டங்களின் சூழ்நிலைக்கேற்ப தேர்வு தேதிகளை முடிவு செய்யும் அதிகாரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு (CEO) வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வுகள் முடிக்கப்படுவதை கல்வித் துறை உறுதி செய்யும்.

Advertisement