LOADING...
மத்திய கிழக்கு போர் பதற்றம்: இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுமா?
இந்தியாவிற்கு தற்போது கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படாது

மத்திய கிழக்கு போர் பதற்றம்: இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுமா?

எழுதியவர் Venkatalakshmi V
Mar 02, 2026
08:11 am

செய்தி முன்னோட்டம்

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் சனிக்கிழமை மூடியது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீதத்தையும், இயற்கை எரிவாயுவில் 60 சதவீதத்தையும் வளைகுடா நாடுகளிலிருந்து இந்த நீரிணை வழியாகவே இறக்குமதி செய்கிறது. எனினும் இந்த நீரிணையை மூடுவதால் இந்தியாவிற்கு தற்போது கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படாது என்கிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள்.

தட்டுப்பாடு

தட்டுப்பாடு ஏற்படாதது ஏன்?

மத்திய அரசு அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தின்படி, அதற்கான காரணங்கள்: நடைமுறை இருப்பு: இந்தியாவிடம் தற்போது 10 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு இருப்பு உள்ளது. அவசரகால இருப்பு: இது தவிர, அவசர காலத்திற்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள எரிபொருளை கொண்டு மேலும் 5 முதல் 7 நாட்கள் வரை சமாளிக்க முடியும். ஹோர்முஸ் நீரிணை மூடல் நீடித்தால், வளைகுடா நாடுகளுக்கு மாற்றாக ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. வளைகுடா நாடுகளிலிருந்து கப்பல் வர 5 நாட்கள் ஆகும் நிலையில், ரஷ்யாவிலிருந்து வர 30 நாட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தட்டுப்பாடு

எரிவாயு தட்டுப்பாடு அபாயம்

பெட்ரோல், டீசல் இருப்பு போதுமானதாக இருந்தாலும், எல்பிஜி (LPG) மற்றும் எல்என்ஜி (LNG) எரிவாயுக்களின் இருப்பு குறைவாகவே உள்ளது. இதற்கான மாற்று வழிகளை விரைந்து கண்டறியாவிட்டால், வரும் நாட்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படவும், அதன் விலை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 73 டாலராக உயர்ந்துள்ளதால், இந்திய சந்தையில் பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் ஏற்படக்கூடும் எனச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement