LOADING...
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போர் தானாம்; ஆப்கானிஸ்தானிற்கு பாகிஸ்தான் மிரட்டல்
ஆப்கானிஸ்தானிற்கு பாகிஸ்தான் எச்சரிக்கை

அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போர் தானாம்; ஆப்கானிஸ்தானிற்கு பாகிஸ்தான் மிரட்டல்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 26, 2025
10:06 am

செய்தி முன்னோட்டம்

அண்டை நாடுகளுக்கிடையில் வளர்ந்து வரும் பதட்டங்களைக் குறைக்க பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தங்கள் முக்கியமான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தையை சனிக்கிழமை (அக்டோபர் 25) இஸ்தான்புல்லில் தொடங்கின. ஆப்கானிஸ்தான் தூதுக்குழுவிற்கு அந்நாட்டின் உள்துறை துணை அமைச்சர் ரஹ்மத்துல்லா முஜிப் தலைமை தாங்குகிறார். அதே சமயம் பாகிஸ்தான் தரப்பில் பாதுகாப்பு அதிகாரிகள் அடங்கிய இருவர் குழு பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த சமீபத்திய பேச்சுவார்த்தைகள் இந்த மாத தொடக்கத்தில் தோஹாவில் கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் நடந்த முதல் சுற்றைத் தொடர்ந்து வந்துள்ளன. இருப்பினும், இந்த பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பின் ஆக்ரோஷமான கருத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளானது.

மேற்பார்வை

மேற்பார்வை அமைப்பு

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஆப்கானிஸ்தானுடன் திறந்த மோதலில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையை ஏற்படுத்தலாம் என்று கவாஜா ஆசிப் எச்சரித்தார். இருப்பினும், இரு தரப்பினரும் சமாதானத்தை நாடுவதாகத் தெரிவதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். ஆப்கானிஸ்தான் மண்ணைப் பயன்படுத்தி எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்துவதாக பாகிஸ்தான் தரப்பில் கூரப்பப்டும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானின் அச்சுறுத்தலை அகற்ற திட்டவட்டமான, சரிபார்க்கக்கூடிய உறுதிப்பாடுகளை ஆப்கானிஸ்தான் தரப்பிலிருந்து பெற பாகிஸ்தான் துருக்கியைப் பயன்படுத்துகிறது. மேலும், இதற்கான முன்னேற்றத்தைச் சரிபார்க்கவும், இணக்கமின்மையைக் கையாளவும் துருக்கி மற்றும் கத்தார் ஆகியவற்றின் இணைத் தலைமையில் ஒரு மூன்றாம் தரப்பு மேற்பார்வை அமைப்பை உருவாக்கவும் பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது.