LOADING...
இம்ரான் கானுக்காக ஒன்று சேர்ந்த 14 கிரிக்கெட் ஜாம்பவான்கள்! கபில் தேவ், கவாஸ்கர் உள்ளிட்டோர் அதிரடி கடிதம்
இம்ரான் கான், கடந்த 2023 ஆகஸ்ட் முதல் சிறையில் இருந்து வருகிறார்

இம்ரான் கானுக்காக ஒன்று சேர்ந்த 14 கிரிக்கெட் ஜாம்பவான்கள்! கபில் தேவ், கவாஸ்கர் உள்ளிட்டோர் அதிரடி கடிதம்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 17, 2026
04:53 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், 1992-ல் உலக கோப்பையை வென்று கொடுத்த நாயகனுமான இம்ரான் கான் (73), கடந்த 2023 ஆகஸ்ட் முதல் சிறையில் இருந்து வருகிறார். அவரது உடல்நிலை, குறிப்பாக வலது கண் பார்வை மோசமடைந்து வருவதாக கூறப்படும் நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் உட்பட 14 சர்வதேச முன்னாள் கேப்டன்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்புக்கு இன்று (பிப். 17, 2026) ஒரு முக்கியமான கூட்டு அறிக்கையை அனுப்பியுள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

மனு

மனுவில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்

இம்ரான் கான் உலக கிரிக்கெட்டின் ஒரு சகாப்தம் என்றும், ஒரு முன்னாள் தலைவராகவும், விளையாட்டு ஐகானாகவும் அவருக்கு உரிய கண்ணியமான சிகிச்சையை வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனுவில், இந்தியாவின் கபில் தேவ், சுனில் கவாஸ்கர், ஆஸ்திரேலியாவின் கிரெக் சேப்பல், ஆலன் பார்டர், ஸ்டீவ் வாக், பெலிண்டா கிளார்க், இங்கிலாந்தின் நாசர் ஹுசைன், மைக்கேல் அதர்டன், டேவிட் கோவர், வெஸ்ட் இண்டீஸின் கிளைவ் லாய்ட் மற்றும் நியூசிலாந்தின் ஜான் ரைட் உள்ளிட்ட 14 கேப்டன்கள் கையெழுத்திட்டுள்ளனர். "கிரிக்கெட் என்பது நாடுகளுக்கு இடையிலான ஒரு பாலம். மைதானத்தில் நிலவும் போட்டி மனப்பான்மை ஆட்டம் முடிந்ததும் முடிந்துவிடும், ஆனால் மரியாதை என்றும் நிலைத்திருக்கும்" என அந்த மனுவில் பாகிஸ்தான் அரசை நினைவூட்டியுள்ளனர்.

Advertisement

தற்போதைய நிலை

தற்போதைய நிலை மற்றும் மருத்துவப் பரிசோதனை

சிறையில் உள்ள இம்ரான் கானுக்கு 'சென்ட்ரல் ரெட்டினல் வெயின் அக்லூஷன்' (CRVO) பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவரது வலது கண்ணில் 85 சதவீத பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 15 அன்று ராவல்பிண்டி அடியாலா சிறையில் ஒரு மருத்துவக் குழு இம்ரான் கானைப் பரிசோதித்தது. அரசுத் தரப்பு மருத்துவர்கள் அவரது பார்வை நிலையில் முன்னேற்றம் இருப்பதாகக் கூறினாலும், இம்ரான் கானின் கட்சி (PTI) மற்றும் அவரது குடும்பத்தினர் இதை மறுத்துள்ளனர். சொந்த மருத்துவர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

Advertisement