சென்னையில் நடக்கும் ஆஸ்திரேலிய டி20 மேட்ச்! பிரதமர் மோடி முன்னிலையில் வெளியான அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற டி20 கிரிக்கெட் தொடரான 'பிக் பாஷ் லீக்' (BBL) 2026-27 சீசனின் தொடக்க ஆட்டம் வரலாற்றிலேயே முதல்முறையாக சென்னையில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் இணைந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டு அறிவிப்பை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளனர். வெளிநாட்டு உள்நாட்டு கிரிக்கெட் லீக் தொடர் ஒன்றின் அதிகாரப்பூர்வ போட்டி இந்தியாவில் நடப்பது இதுவே முதல்முறையாகும். சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்தத் தொடக்க ஆட்டத்தில், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் ஆகிய இரு அணிகள் மோதவுள்ளன. BCCI-யின் முழு ஆதரவோடு இப்போட்டி நடத்தப்பட உள்ளது.
பிரதமர் மோடி
மெல்போர்னில் பிரதமர் மோடி உரை
ஆஸ்திரேலியாவின் வரலாற்று சிறப்புமிக்க மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திற்கு (MCG) நேரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, "இந்த மைதானத்தில் கால் பதிப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் இருதரப்பு ஆட்டத்தின் விறுவிறுப்பையும், கிரிக்கெட் என்பது இரு நாடுகளுக்கும் வெறும் விளையாட்டு அல்ல, அதையும் தாண்டிய ஒரு பகிரப்பட்ட உணர்வு என்பதையும் நினைவூட்டுகிறது". "ஆனால் இன்று, கடைசி ஓவர் விறுவிறுப்பு என்ற எந்த அழுத்தமும் இன்றி, இரு நாடுகளின் நட்பு மற்றும் தூதரக உறவின் மகிழ்ச்சியை மட்டுமே நாம் கொண்டாடுகிறோம்" என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Breaking: India will host the opening match of Australia's Big Bash T20 league this year, announce the PMs of both countries
— Shashank Mattoo (@MattooShashank) July 10, 2026
This is the first foreign cricket league to play in India pic.twitter.com/5fUJ9urTCi
திருவிழா
கலாச்சாரத் திருவிழா மற்றும் வர்த்தக நோக்கம்
இந்த சென்னை போட்டியையொட்டி ஆஸ்திரேலிய அரசு மற்றும் 'இந்தியா-ஆஸ்திரேலியா உறவுகளுக்கான மையம்' இணைந்து திரைப்படம் மற்றும் கலை விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு கலாச்சார நிகழ்வுகளை சென்னையில் நடத்தத் திட்டமிட்டுள்ளன. இந்தியாவில் பிபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமையை கொண்டுள்ள 'JioStar நிறுவனத்தின் வர்த்தகத்தை மேம்படுத்தவும், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் சந்தையை சர்வதேச அளவில் விரிவுபடுத்தவும், ஐபிஎல் அணி உரிமையாளர்களின் முதலீடுகளை ஈர்க்கவும் இந்த முயற்சி ஒரு பாலமாக அமையும் என பிக் பாஷ் லீக்கின் நிர்வாக பொது மேலாளர் அலிஸ்டர் டாப்சன் தெரிவித்துள்ளார்.