கரூர்: செய்தி
'எனது கருத்தை விஜய்க்கு எதிராகத் திசைதிருப்ப வேண்டாம்': கரூர் சம்பவம் குறித்து அஜித்குமார் அறிக்கை
கரூர் தமிழக வெற்றிக் கழக (தவெக) பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து தான் கூறிய கருத்தை, தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு எதிராகத் திசை திருப்ப வேண்டாம் என்று நடிகர் அஜித்குமார் கோரிக்கை விடுத்துள்ளதாக ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே தனது சாணக்யா வலைதளத்தில் ஆடியோ அடங்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பொதுக்கூட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: SOP விதிகளை வகுக்கும் தமிழக அரசு
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் நடத்திய கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகத்தை தொடர்ந்து, தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் பொதுக்கூட்டங்கள் நடத்தக் கடுமையான பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைகளை அமல்படுத்த, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (நவம்பர் 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
TVK கரூர் நெரிசல் சம்பவம்: 306 பேருக்கு CBI 'சம்மன்'
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற TVK தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் சம்பவத்தில் கற்ற பாடம்; தவெக தொண்டரணிக்கு ஓய்வு பெற்ற ஐஜி தலைமையில் சிறப்புக் குழு அமைப்பு
கரூர் சம்பவத்திற்குப் பிறகு நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி செயல்பாடுகளில் முக்கிய மாற்றங்களைச் செய்து வருகிறது.
கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்களை இன்று மகாபலிபுரத்தில் சந்திக்கிறார் TVK தலைவர் விஜய்
கரூர் வேலாயுதம்பாளையத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி, தமிழக வெற்றி கழகத்தின் (TVK) பொதுக் கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலியான 41 பேரின் குடும்பத்தினரை கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய், இன்று (அக்டோபர் 27) மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார்.
தமிழக வெற்றி கழகம் அங்கீகரிக்கப்படாத கட்சியா? அப்படியென்றால் என்ன?
கரூரில் நடந்த பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததையடுத்து, 'தமிழக வெற்றி கழகம்' (TVK) என்ற அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
TVK கரூர் நெரிசல் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்த் விஜய்யை சந்தித்தாக தகவல்
கரூரில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் நேற்று இரவு தவெக தலைவர் விஜய்யை சந்தித்தனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
TVK கரூர் நெரிசல் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பின், தனி நபர் ஆணையம் மற்றும் SIT நிலைமை என்ன?
கரூரில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை மேற்பார்வையிடும் முன்னாள் நீதிபதிக்கும் ஜல்லிக்கட்டுக்கு இப்படியொரு தொடர்பா? முழு விபரம்
கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.
TVK கரூர் நெரிசல் விவகாரத்தில் CBI விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்
கரூரில் நடந்த TVK கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ (CBI) விசாரணைக்கு உத்தரவு வழங்கியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தமிழக அரசிடம் விரிவான அறிக்கை கேட்கும் உச்ச நீதிமன்றம்
கரூரில் நடந்த தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைவர் நடிகர் விஜய்யின் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் (சுப்ரீம் கோர்ட்) இன்று விசாரித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல்: பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க அனுமதி கோரிய விஜய்
கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சோக நிகழ்வுக்குப் பிறகு, தமிழக வெற்றி கழக (TVK) தலைவர் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்திக்க தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரிடம் (DGP) அனுமதி கோரியுள்ளார்.
"நான் உங்களுடன் இருக்கிறேன், இருப்பேன்": கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களிடம் வீடியோ காலில் பேசும் TVK விஜய்
நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய், கரூரில் நடந்த பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலமாக பேசினார்.
கரூர் விபத்தால் பின்னடைவு: தவெக உள்கட்டமைப்பை மாற்றியமைக்க விஜய் தீவிரம்?
கரூர் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு (தவெக)மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
விஜயின் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது வழக்கு, வாகனத்தைப் பறிமுதல் செய்யத் திட்டம்
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயின் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் காயமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறையினர் விஜயின் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முன்ஜாமீன் கோரி தவெக நிர்வாகிகள் என்.ஆனந்த், நிர்மல் குமார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மற்றும் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசல் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நேரில் ஆய்வு
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நேரில் ஆய்வு மேற்கொண்டது.
கரூர் விபத்தை விசாரிக்க ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு
கரூரில் விஜய் கலந்துகொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி; உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
கரூர், வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் கலந்து கொண்ட அரசியல் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
Karur Stampede எதிரொலி: அடுத்த இரண்டு வாரங்களுக்கான TVK விஜய் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டது
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததையடுத்து, தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தவெக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
"விஜய் 4 மணிக்கு வந்திருந்தால் விபத்து நடந்திருக்காது": கரூர் விபத்து குறித்து செந்தில் பாலாஜி
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த துயரமான கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு, நடிகர் விஜய்யின் வருகை நேரம் மற்றும் அவரது கட்சி சார்பில் செய்யப்பட்ட அடிப்படை வசதி குறைபாடுகளே காரணம் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
"உண்மை விரைவில் வெளி வரும்: கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் வெளியிட்ட முதல் வீடியோ
கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததைத்தொடர்ந்து, தமிழக வெற்றி கழகம்(தவெக) தலைவர் விஜய் தனது முதல் காணொளி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
TVK கரூர் பொதுக்கூட்டம்: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமீன் மனு
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றி கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய்யின் பிரச்சாரப் பயணத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான துயர சம்பவம் தொடர்பாக, தவெக-வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிர்மலா சீதாராமன் ஆறுதல்; NDA பிரதிநிதிகள் குழு அமைப்பு
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கட்கிழமை (செப்டம்பர் 29) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
TVK பேரணி கரூர் கூட்ட நெரிசல்: நீதிமன்றத்தில் TVK சார்பாக எழுப்பப்பட்ட கேள்விகள் என்ன?
கடந்த சனிக்கிழமை கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக (தமிழக வெற்றி கழகம்) பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ள நிலையில், அக்கட்சியின் சார்பில் நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளனர்.
கரூர் சம்பவம்: மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கை எடுப்பதில் தாமதம்; சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக தவெக திட்டம்
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 40 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
TVK Stampede கரூர் துயர சம்பவத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு
கடந்த சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், மரண மொத்த எண்ணிக்கையை 41 ஆக உயர்த்தியுள்ளது.