LOADING...
கரூர் கூட்ட நெரிசல்: பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க அனுமதி கோரிய விஜய்
உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்திக்க DGP அனுமதி கோரியுள்ளார் விஜய்

கரூர் கூட்ட நெரிசல்: பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க அனுமதி கோரிய விஜய்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 08, 2025
09:12 am

செய்தி முன்னோட்டம்

கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சோக நிகழ்வுக்குப் பிறகு, தமிழக வெற்றி கழக (TVK) தலைவர் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்திக்க தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரிடம் (DGP) அனுமதி கோரியுள்ளார். முன்னதாக வீடியோ அழைப்புகள் மூலமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை அழைத்து ஆறுதல் விஜய், தனது ஆதரவும், இரங்கலையும் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது, அனுமதி கோரும் மின்னஞ்சலை DGP-க்கு அனுப்பியுள்ளார் என நியூஸ்18 செய்தி வெளியிட்டுள்ளது.

நேரடி சந்திப்பு

விமர்சனங்களை தொடர்ந்து நேரடி சந்திப்பு முயற்சி

நடிகர் விஜய், சம்பவ இடத்திற்கு நேரில் செல்லாததற்காக சமூக வலைதளங்கள் மற்றும் சில அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒருவிதத்தில், விஜய் தனது ஆறுதலையும், இரங்கல் செய்தியையும் வீடியோ மூலமாக தெரிவித்திருந்தாலும், அது காலம் கடந்து வந்ததாக பலரும் கருதினர். தார்மீக அடிப்படையில் TVK தலைவர் கரூர் மக்களை நேரில் சந்திருக்க வேண்டும் எனவும் பெரும்பாலானோர் கருதினர். முன்னதாக, விஜய் கரூர் செல்வாரா என்பது தெளிவாகாத நிலையில் இருந்தது. எனினும், கட்சி உறுப்பினர்களுக்கு அவர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அணுகுமாறு அறிவுறுத்தியிருந்ததாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தான் விஜய் காவல்துறை அனுமதி கோரி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.