72 நாட்களுக்கு பின்னர் மக்களை சந்தித்த விஜய்: புதுச்சேரியில் பேசியது என்ன?
செய்தி முன்னோட்டம்
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, சுமார் 72 நாட்களுக்கு பிறகு மீண்டும் அரசியல் கூட்டத்தில் இன்று விஜய் கலந்துகொண்டார். புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை அலைகடலென திரண்டிருக்க, அவர்கள் முன் பேசிய TVK தலைவர் நடிகர் விஜய், மத்திய அரசையும், தமிழக அரசையும் கடுமையாக விமர்சித்து பேசினார். புதுச்சேரி மாநிலத்திற்கான மாநில அந்தஸ்தை மத்திய அரசு வேண்டுமென்றே கொடுக்க மறுப்பதாக விஜய் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக சட்டமன்றத்தில் 16 முறை தீர்மானங்கள் அனுப்பப்பட்டும், மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்று அவர் விமர்சித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
BREAKING: Here's Thalapathy VIJAY's full speech from Puducherry campaign. #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay #உங்கவிஜய்_நா_வரேன் pic.twitter.com/WldD8qAuWl
— Actor Vijay Team (@ActorVijayTeam) December 9, 2025
வேலைவாய்ப்பு
பாண்டிச்சேரி தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக குற்றசாட்டு
புதுச்சேரியில் வேலைவாய்ப்பை உருவாக்கும் ஐ.டி. நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைகளை தொடங்க மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மேலும், மூடப்பட்ட ஐந்து ஆலைகளை மீண்டும் திறக்க ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை என்று விஜய் சாடினார். புதுச்சேரியில் ஒரு அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக பதவி விலகிய பின்னரும், புதிய அமைச்சருக்கு பொறுப்புகள் வழங்கப்படாதது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
பாராட்டு
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு நன்றி கூறிய விஜய்
"தி.மு.க.வை நம்பாதீர்கள், நம்ப வைத்து ஏமாற்றுவதுதான் அவர்களின் வேலை" என்று புதுச்சேரி மக்களிடம் விஜய் கேட்டுக்கொண்டார். மேலும், புதுச்சேரி பொதுக்கூட்டத்திற்கு பாதுகாப்பு கொடுத்த புதுச்சேரி அரசை கண்டாவது தி.மு.க. அரசு கற்றுக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் வரும் தேர்தலில் மக்கள் 100% கற்றுக்கொடுப்பார்கள் என்று அவர் எச்சரித்தார். அதேசமயம், த.வெ.க.வின் கூட்டம் வேறு கட்சி நடத்திய கூட்டமாக இருந்தாலும், எந்தப் பாரபட்சமும் பார்க்காமல் சிறப்பான பாதுகாப்பு அளித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு அவர் நன்றி தெரிவித்தார். இறுதியாக, "தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, புதுச்சேரி மக்களுக்காகவும் இந்த விஜய் துணை நிற்பான், கூடிய விரைவில் புதுச்சேரியிலும் த.வெ.க. கொடி பறக்கும்," என்று அவர் உறுதியளித்தார்.