
தமிழக வெற்றி கழகம் அங்கீகரிக்கப்படாத கட்சியா? அப்படியென்றால் என்ன?
செய்தி முன்னோட்டம்
கரூரில் நடந்த பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததையடுத்து, 'தமிழக வெற்றி கழகம்' (TVK) என்ற அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்தக் கட்சி, சட்டப்படி தேவையான அனுமதிகளை பெறாமல் பொதுக்கூட்டம் நடத்தி, பாதுகாப்பு விதிகளை மீறியதாகவும், இதனால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை பொது நல மனுவாக தாக்கல் செய்துள்ளனர். மனுதாரர், தேர்தல் ஆணையம் இந்த அரசியல் கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
பதில்
மத்திய தேர்தல் ஆணையம் பதில்
இந்த வழக்கிற்கு பதிலளித்த மத்திய தேர்தல் ஆணையம், TVK இன்னும் அங்கீகரிக்கபடாத கட்சி என்பதால், அதன் அங்கீகாரத்தை ரத்து செய்யமுடியாது எனத்தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பதிலால் பலரும் குழப்படைந்துள்ளனர். இந்த நிலையில் TVK தலைமை ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.
TVK
"அங்கீகாரம் பெறாத கட்சியின் அங்கீகாரம் எப்படிச் ரத்து செய்யப்படும்?": TVK
'தமிழக வெற்றி கழகம்' (தவெக) மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்டுள்ள வழக்கின் சட்டவழிமுறை தகுதிகள் குறித்து அரசியல் வட்டாரங்களில் கேள்விகள் எழுகின்றன. இக்கட்சி தற்போது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சி (Registered Party) என்ற மட்டத்தில் மட்டுமே இருந்து வருவதாக அதிகாரப்பூர்வ ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ஒரு அங்கீகாரம் பெறாத கட்சியின் அங்கீகாரத்தை எவ்வாறு 'ரத்து செய்ய முடியும்' என்பதே தற்போது எழும் முக்கியமான சட்டவியல் கேள்வியாகிறது.
நிபந்தனைகள்
அங்கீகாரம் பெறுவதற்கான நிபந்தனைகள் என்ன?
தேர்தல் ஆணைய விதிமுறைகள்படி, ஒரு கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற நான்கு முக்கிய நிபந்தனைகள் உள்ளன. அவற்றுள் குறிப்பிடும் படியாக: மாநிலத்திலுள்ள 234 தொகுதிகளில் போட்டியிட்டு, குறைந்தபட்சம் 8% வாக்குகளைப் பெற வேண்டும். அதே தொகுதிகளில் குறைந்தபட்சம் 8 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒரு நிபந்தனையாவது பூர்த்தி செய்தாலே, அந்த கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி (Recognised Party) என்ற அந்தஸ்தை பெறும். "பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருந்த நாதக, விசிக 2024 பாராளுமன்ற தேர்தலில் தான் மேற்கண்ட சில நிபந்தனைகளை நிறைவேற்றி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறினார்கள்" என TVK தரப்பு வாதிடுகிறது.