LOADING...
TVK கரூர் நெரிசல் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்த் விஜய்யை சந்தித்தாக தகவல்
இருவரும் நேற்று இரவு தவெக தலைவர் விஜய்யை சந்தித்தனர் என செய்திகள் வெளியாகியுள்ளன

TVK கரூர் நெரிசல் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்த் விஜய்யை சந்தித்தாக தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 14, 2025
09:09 am

செய்தி முன்னோட்டம்

கரூரில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் நேற்று இரவு தவெக தலைவர் விஜய்யை சந்தித்தனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சிடிஆர் நிர்மல்குமார், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கரூர் சம்பவம் தொடர்பாகப் போலீஸ் கைது நடவடிக்கைக்கு மத்தியில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல்குமார் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில், கரூர் வழக்கை விசாரிக்குமாறு உச்சநீதிமன்றம் சிபிஐ-க்கு உத்தரவிட்டு, புதிய விசாரணைக் குழுவை அமைத்தது.

கூட்டணி

செய்தியாளர்களை சந்தித்த சிடிஆர் நிர்மல்குமார்

செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த நிர்மல்குமார், செந்தில் பாலாஜியை நேரடியாகக் குற்றம்சாட்டி பேசினார். "கரூரில் ஒவ்வொருவரும் மிரட்டப்படும் நிலை உள்ளது. பிறழ்சாட்சி மன்னனாக இருக்கும் ஒரு வழக்கிற்கே சொந்தக்காரர் செந்தில் பாலாஜி" என்று அவர் சாடினார். 50 பேரையே பிறழ்சாட்சியாக மாற்றிய செந்தில் பாலாஜிக்கு, இந்த வழக்கில் 4 அல்லது 5 பேரை மாற்றுவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்றும், உண்மை ஒருநாள் வெளியே வரும் என்றும் அவர் தெரிவித்தார். அதோடு, கரூர் வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டதால், தவெக பாஜக-விற்கு அடிபணிந்து விட்டதாக எழுந்த விமர்சனங்களுக்கு மறுப்பு தெரிவித்தார். "இதற்கு முன் திமுக பல விஷயங்களில் சிபிஐ விசாரணைகளை கோரியுள்ளது. அப்போது அவர்கள் மத்திய அரசின் கூட்டணியில் இருந்தார்களா?" என்று தெளிவுபடுத்தினார்.