LOADING...
Karur Stampede எதிரொலி: அடுத்த இரண்டு வாரங்களுக்கான TVK விஜய் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டது 
விஜய்யின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைப்பு

Karur Stampede எதிரொலி: அடுத்த இரண்டு வாரங்களுக்கான TVK விஜய் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டது 

எழுதியவர் Venkatalakshmi V
Oct 01, 2025
03:10 pm

செய்தி முன்னோட்டம்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததையடுத்து, தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தவெக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கரூர் துயர சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காக மன வேதனையுடன் இருப்பதாக விஜய் ஏற்கெனவே ஒரு வீடியோ வெளியிட்டு ஆறுதல் தெரிவித்திருந்தார்.

அறிக்கை

தவெக வெளியிட்டுள்ள அறிக்கை

இன்று (அக்டோபர் 1, 2025) தவெக வெளியிட்டுள்ள அறிக்கையில், "நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், விஜய்யின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய்யின் அடுத்தகட்ட பிரசாரப் பயணத் திட்டம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post