LOADING...
பாகிஸ்தானில் 'துரந்தர்' மேனியா! கள்ளச்சந்தையில் ரூ.16-க்கு விற்கப்படுகிறதாம்
'துரந்தர்' திரைப்படம், பாகிஸ்தான் Netflix தளத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது

பாகிஸ்தானில் 'துரந்தர்' மேனியா! கள்ளச்சந்தையில் ரூ.16-க்கு விற்கப்படுகிறதாம்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 13, 2026
04:22 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், பாலிவுட் படங்கள் அந்நாட்டு மக்களின் இதயங்களிலும் கராச்சி வீதிகளிலும் தொடர்ந்து இடம்பிடித்து வருகின்றன. சமீபத்தில் கராச்சியின் லியாரி பகுதியை மையமாக வைத்து வெளியான ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' திரைப்படம், பாகிஸ்தான் Netflix தளத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. இந்நிலையில், இப்படத்தின் Pirated Copies பாகிஸ்தானில் மிகக் குறைந்த விலைக்கு விற்கப்படும் தகவல் இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவல்கள்

முக்கியத் தகவல்கள்

டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள செய்தியில், பிரபல யூடியூபர் Karl Rock கராச்சியின் ரெயின்போ சென்டர் சந்தையில் எடுத்த வீடியோவில், 'துரந்தர்' படத்தின் டிவிடிக்கள் வெறும் 50 பாகிஸ்தான் ரூபாய்க்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 16) விற்கப்படுவதை காட்டியுள்ளார். ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான இப்படம், பாகிஸ்தானால் தடை செய்யப்பட்டிருந்தாலும், அங்குள்ள மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இப்படத்தின் கதை கராச்சியின் நிழல் உலக தாதாக்களான ரஹ்மான் டகாய்ட் போன்ற நிஜ கதாபாத்திரங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் லியாரி பகுதிக்குள் ஊடுருவும் ஒரு இந்திய உளவாளியின் கதையே 'துரந்தர்'. இதில் ரன்வீர் சிங்குடன் அக்ஷய் கண்ணா, சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால் மற்றும் ஆர். மாதவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Advertisement