LOADING...
பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்திற்கு ஆறு கிலோமீட்டர் தொலைவில் ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியது ஆப்கானிஸ்தான்
பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்திற்கு ஆறு கிலோமீட்டர் தொலைவில் தாக்குதல் நடத்திய ஆப்கானிஸ்தான்

பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்திற்கு ஆறு கிலோமீட்டர் தொலைவில் ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியது ஆப்கானிஸ்தான்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 27, 2026
04:41 pm

செய்தி முன்னோட்டம்

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்திலிருந்து வெறும் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைசாபாத் பகுதியில் உள்ள ராணுவ நிலைகள் மீது ஆப்கானிஸ்தான் தாலிபான் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. துல்லியமான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தற்கொலை ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய அணுசக்தி தொடர்பான மையங்கள் இலக்கு வைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதிலடி

தாலிபான்களின் பதில் தாக்குதல்

பாகிஸ்தான் ராணுவம் இன்று அதிகாலை ஆபரேஷன் கசாப் லில்-ஹக் என்ற பெயரில் காபூல், கந்தகார் மற்றும் பக்தியா ஆகிய இடங்களில் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இது பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானின் அந்தத் தாக்குதலில் 130 க்கும் மேற்பட்ட தாலிபான் வீரர்கள் கொல்லப்பட்டதுடன், நங்கர்ஹார் பகுதியில் இருந்த ஆயுதக் கிடங்குகளும் அழிக்கப்பட்டன. இதற்குப் பழிவாங்கும் விதமாக, இன்று காலை 11 மணியளவில் இஸ்லாமாபாத், நோஷெரா, ஜம்ருத் மற்றும் அபோதாபாத் ஆகிய இடங்களில் உள்ள ராணுவ மையங்கள் மீது தாலிபான்கள் தாக்குதல் நடத்தினர்.

ஆபத்து

எல்லையைத் தாண்டிய ஆபத்து

தாலிபான்களின் வான்படை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய முகாம்கள் மற்றும் மையங்கள் வெற்றிகரமாகத் தாக்கப்பட்டன. தலிபான்களின் துணை செய்தித் தொடர்பாளர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "பாகிஸ்தான் திறந்த போரை அறிவித்துள்ளது, அதற்கான வெற்றியை நாங்கள் பெறுவோம்." என்று பதிவிட்டுள்ளார். வழக்கமாக எல்லைப் பகுதிகளில் மட்டுமே நடந்து வந்த மோதல், தற்போது பாகிஸ்தானின் இதயம் போன்ற தலைநகர் இஸ்லாமாபாத் வரை பரவியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

மத்தியஸ்தம்

பிராந்தியப் பதற்றமும் மத்தியஸ்தமும்

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அலுவலகம் அருகிலேயே இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளதால், பாகிஸ்தானின் பாதுகாப்பு ஏற்பாடுகள் கேள்விக்குறியாகியுள்ளன. பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆசிப் போரை அறிவித்துள்ள நிலையில், ஈரான் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் இந்த மோதலைத் தணிக்க மத்தியஸ்தம் செய்ய முயற்சி செய்து வருகின்றன. அணு ஆயுத பலம் கொண்ட பாகிஸ்தானுக்கும், அதிநவீன ட்ரோன் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் தலிபான்களுக்கும் இடையிலான இந்தப் போர், தெற்காசியப் பிராந்தியத்தில் பெரும் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கியுள்ளது.

Advertisement