2026 டி20 உலகக் கோப்பை: இந்தியாவுடனான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி (ICC) டி20 உலகக் கோப்பை தொடர் தொடர்பாக பாகிஸ்தான் அரசு எடுத்துள்ள ஒரு முன்னோடியில்லாத முடிவு சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள இந்த உலக கோப்பை தொடரில், இந்தியாவில் விளையாடுவது பாதுகாப்பு ரீதியாக அச்சுறுத்தல் என வங்கதேசம் (Bangladesh) கவலை தெரிவித்தது. இதை தொடர்ந்து, ஐசிசி அந்த தொடரிலிருந்து வங்கதேசத்தை நீக்கியது. இந்த பின்னணியில் தான் பாகிஸ்தான் தனது முடிவை அறிவித்துள்ளது.
அறிவிப்பு
பாகிஸ்தான் அரசின் அறிவிப்பு
பாகிஸ்தான் அரசு இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: "2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்க அரசு அனுமதி அளிக்கிறது. இருப்பினும், பிப்ரவரி 15, 2026 அன்று இந்தியாவுக்கு எதிராக நடைபெற திட்டமிடப்பட்டுள்ள லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி களம் காணாது. அந்தப் போட்டியைப் பாகிஸ்தான் புறக்கணிக்கிறது." இந்தியா -பாகிஸ்தான் இடையிலான போட்டி என்பது உலகளவில் அதிக வருவாய் மற்றும் பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்வாகும். பாகிஸ்தான் அரசின் இந்த முடிவால் ஐசிசி-க்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், இந்தப் போட்டியில் பங்கேற்காததன் மூலம் பாகிஸ்தான் அணி தனது புள்ளிகளை இழக்க நேரிடும், இது அவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதிலும் சிக்கலை ஏற்படுத்தும்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
இந்தியாவுடன் பாக். விளையாடாதுhttps://t.co/wupaoCzH82 | #T20WorldCup2026 #T20WorldCup #INDvsPAK #INDvPAK #T20I #BOYCOTT #Cricket #ABPNADU pic.twitter.com/I5FWJYTQxs
— ABP Nadu (@abpnadu) February 1, 2026