LOADING...
தலைநிமிரும் காஷ்மீர் பெண்! குடியரசு தின அணிவகுப்பில் 140 வீரர்களை வழிநடத்தும் சிம்ரன் பாலா
சிம்ரன் பாலா, 140-க்கும் மேற்பட்ட ஆண்கள் கொண்ட அணிவகுப்பு படைப்பிரிவை வழிநடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

தலைநிமிரும் காஷ்மீர் பெண்! குடியரசு தின அணிவகுப்பில் 140 வீரர்களை வழிநடத்தும் சிம்ரன் பாலா

எழுதியவர் Venkatalakshmi V
Jan 22, 2026
11:12 am

செய்தி முன்னோட்டம்

வருகிற ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ள 77-வது குடியரசு தின விழாவில், நாட்டின் பாதுகாப்பு படைகளில் நிலவி வரும் பாலின கட்டுப்பாடுகளை உடைக்கும் ஒரு வரலாற்று நிகழ்வு அரங்கேற உள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தை சேர்ந்த 26 வயதான CRPF உதவி கமாண்டன்ட் சிம்ரன் பாலா, 140-க்கும் மேற்பட்ட ஆண்கள் கொண்ட அணிவகுப்புப் படைப்பிரிவை வழிநடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விவரங்கள்

யார் இந்த சிம்ரன் பாலா?

இந்தியா- பாகிஸ்தான் எல்லை பகுதியில் பிறந்த சிம்ரன் பாலா, தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி (UPSC CAPF) தேர்வில் வெற்றி பெற்று, முதல் 100 இடங்களுக்குள் ரேங்க் பெற்று, CRPF அதிகாரியாக பணியில் சேர்ந்தார். இவர் தனது மாவட்டத்திலிருந்து CRPF-இல் குரூப் A அதிகாரியாக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். இவரது முதல் பணி சத்தீஸ்கரின் நக்சலைட் பாதிப்புள்ள பகுதிகளில் அமைந்திருந்தது. அங்கு இவரது துணிச்சலான மற்றும் நிதானமான செயல்பாடுகள் உயரதிகாரிகளின் பாராட்டை பெற்றன.

சிறப்பு

வரலாற்றுச் சிறப்பு: ஆண்கள் படைப்பிரிவை தாங்கும் முதல் பெண்

முன்னதாக பெண்கள் படைப்பிரிவை பெண் அதிகாரிகள் வழிநடத்தியுள்ளனர். ஆனால், முழுவதும் ஆண்கள் மட்டுமே கொண்ட ஒரு பெரிய படைப்பிரிவை ஒரு பெண் அதிகாரி வழிநடத்துவது CRPF வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இதற்காக கடந்த ஒரு மாதமாக கர்த்தவ்யா பாதையில் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வரும் சிம்ரன் பாலா, இது குறித்துப் பேசுகையில், "இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம். திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் சிஆர்பிஎஃப்-ன் கொள்கையை இது காட்டுகிறது" எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள இளம் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழும் சிம்ரன் பாலாவின் இந்தப் பயணம், இந்தியப் பாதுகாப்புப் படைகளில் தலைமைப் பொறுப்புகளில் பெண்கள் முன்னிலை பெறுவதை உலகிற்குப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது

Advertisement