LOADING...
90 ஆண்டுகளில் முதல்முறையாக நியூஸிலாந்து நாட்டிற்கு விசிட் நடித்துள்ள ஜப்பான் போர்க்கப்பல்
90 ஆண்டுகளில் முதல்முறையாக நியூஸிலாந்திற்கு சென்ற ஜப்பான் போர்க்கப்பல்

90 ஆண்டுகளில் முதல்முறையாக நியூஸிலாந்து நாட்டிற்கு விசிட் நடித்துள்ள ஜப்பான் போர்க்கப்பல்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 08, 2025
04:42 pm

செய்தி முன்னோட்டம்

கிட்டத்தட்ட 90 ஆண்டுகளில் முதல் முறையாக, ஜப்பானிய போர்க்கப்பல்கள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) நியூசிலாந்தின் வெலிங்டனில் நங்கூரமிட்டன. இது தெற்கு பசிபிக் பகுதியில் ஜப்பானின் மூலோபாய உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு அடையாள படியைக் குறிக்கிறது. இரண்டு ஜப்பானிய போர்க்கப்பல்களான JS Ise மற்றும் JS Suzunami, 500 க்கும் மேற்பட்ட பணியாளர்களை ஏற்றி, நியூசிலாந்து கடற்படைக் கப்பலான HMNZS Canterbury உடன் தங்கள் இந்தோ-பசிபிக் வரிசைப்படுத்தலின் ஒரு பகுதியாக வந்தன. இந்த கப்பல்கள் சிட்னியில் இருந்து புறப்பட்டன, அங்கு ஜப்பானியப் படைகள் சமீபத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிற பிராந்திய நட்பு நாடுகளுடன் கூட்டு ராணுவப் பயிற்சியை மேகொண்டது குறிப்பிடத்தக்கது.

ராணுவ ஒத்துழைப்பு

அமெரிக்க கூட்டணிக்கு அப்பால் ராணுவ ஒத்துழைப்பு 

சம்பிரதாயமான இயல்புடையதாக இருந்தாலும், அமெரிக்காவுடனான அதன் ஒரே ஒப்பந்த கூட்டணிக்கு அப்பால் ராணுவ ஒத்துழைப்பை ஆழப்படுத்த ஜப்பானின் வளர்ந்து வரும் முயற்சிகளை இந்த வருகை பிரதிபலிக்கிறது. சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் தான் எங்கள் முக்கிய குறிக்கோள் என்று நியூசிலாந்திற்கான ஜப்பான் தூதர் மகோடோ ஒசாவா கூறினார். பசிபிக் தீவு நாடுகள், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுடன் கூட்டாண்மைகளை அதிகரிப்பதை வலியுறுத்தினார். ஜப்பானின் மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸுக்கு ஆஸ்திரேலியா ஒரு பெரிய போர்க்கப்பல் கட்டுமான ஒப்பந்தத்தை வழங்கிய சில நாட்களுக்குப் பிறகு இந்த பயணமா மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.