LOADING...
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு நிம்மதி; மீண்டும் சிறிய அளவில் இறங்கியது தங்க விலை
மீண்டும் சிறிய அளவில் இறங்கிய தங்க விலை

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு நிம்மதி; மீண்டும் சிறிய அளவில் இறங்கியது தங்க விலை

எழுதியவர் Sekar Chinnappan
Feb 27, 2026
10:21 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு சற்று நிம்மதியளிக்கும் வகையில் தங்க விலை, வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹20 குறைந்து ₹14,900 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹160 குறைந்து ₹1,19,200 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹22 குறைந்து ₹16,255 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹176 குறைந்து ₹1,30,040 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை நிலவரம்

18 காரட் தங்கத்தின் விலையில் இன்று சிறிய அளவில் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹15 குறைந்து ₹12,750 ஆகவும், ஒரு சவரன் ₹120 குறைந்து ₹1,02,000 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளிக்கிழமை வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹295.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,95,000 ஆகவும் விற்பனை ஆகிறது. சமீப காலமாக தங்கம் வெள்ளி விலையில் பெரிய அளவில் மாற்றமில்லாமல் இருந்தாலும், சர்வதேச அரசியல் சூழல்களால் மீண்டும் நிலையற்ற தன்மை ஏற்படலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement