Page Loader
மே மாதத்திற்குப் பிறகு பொதுவெளியில் தென்படாத ஜி ஜின்பிங்; ஆட்சிக் கவிழ்ப்பு அச்சத்தால் பதுங்கிவிட்டாரா?
மே மாதத்திற்குப் பிறகு பொதுவெளியில் தென்படாத ஜி ஜின்பிங்

மே மாதத்திற்குப் பிறகு பொதுவெளியில் தென்படாத ஜி ஜின்பிங்; ஆட்சிக் கவிழ்ப்பு அச்சத்தால் பதுங்கிவிட்டாரா?

எழுதியவர் Sekar Chinnappan
Jul 05, 2025
08:24 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த மே மாத இறுதியில் இருந்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகி இருப்பது, சீனாவை ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நிலவும் உள் அதிகாரப் போராட்டம் குறித்த தீவிர ஊகங்களைத் தூண்டியுள்ளது. சீனாவின் அரசியல் மற்றும் ராணுவத்தின் மீதான இரும்புப் பிடிக்கு பெயர் பெற்ற ஜி ஜின்பிங், ஒரு மாதத்திற்கும் மேலாக அரசு ஊடகங்கள், ராஜதந்திர கூட்டங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை. பிரேசிலில் நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டைத் தவிர்ப்பதற்கான அவரது முடிவு சுகாதாரப் பிரச்சினைகள், அரசியல் முரண்பாடுகள் அல்லது ஆட்சிக் கவிழ்ப்பு பற்றிய வதந்திகளை தூண்டியுள்ளது.

ஊடகங்கள்

ஊடகங்களின் ஜி ஜின்பிங்கின் செய்திகள் குறைவு

பாரம்பரியமாக, சீன அரசு ஊடகங்கள் ஜி ஜின்பிங்கின் செயல்பாடுகளால் நிரம்பியிருக்கும். ஆனால் சமீபத்திய அவர் குறித்த செய்திகள் குறைந்துவிட்டன. உயர் மட்ட வெளிநாட்டு பிரமுகர்களின் வருகைகள் இப்போது கீழ்நிலை அதிகாரிகளால் கையாளப்படுகின்றன. சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்திற்குள் உள் அதிருப்தியின் அறிகுறிகளை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஏனெனில் ஜி ஜின்பிங்கின் விரிவான களையெடுப்பு மற்றும் அதிகார ஒருங்கிணைப்பு முக்கிய ராணுவ பிரமுகர்களுடனான உறவுகளை சீர்குலைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஹு ஜின்டாவோவின் ஆதரவாளராக கூறப்படும் மூத்த ராணுவ தளபதியான ஜெனரல் ஜாங் யூசியா, ஜின்பிங்கின் அதிகாரம் தொடர்ந்து பலவீனமடைந்தால் அடுத்த தலைவராக உருவெடுத்து வருகிறார்.

தெளிவற்ற நிலை

ஜி ஜின்பிங் குறித்து தெளிவற்ற நிலை

ஜி ஜின்பிங்கின் தந்தையின் கல்லறையின் அதிகாரப்பூர்வ அந்தஸ்தை அமைதியாக ரத்து செய்வது போன்ற குறியீட்டு நடவடிக்கைகளையும் அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிட்டனர். இது அவரது மரபு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த நிச்சயமற்ற தன்மை நுட்பமான இருதரப்பு உறவுகளை மறுவடிவமைக்கக்கூடும். இது சீனத் தலைமை மாறி வருவதற்கு மத்தியில் இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கையை மருவடிவமைக்கும் சூழலை ஏற்படுத்தலாம். ஜூன் 30 தேதியிட்ட பொலிட்பீரோவில் ஜின்பிங் உரையாற்றும் காட்சிகளை சீன ஊடகங்கள் சமீபத்தில் வெளியிட்டிருந்தாலும், அதன் நேரம் மற்றும் நம்பகத்தன்மை ஆய்வுக்கு உட்பட்டுள்ளன. இப்போதைக்கு, தெளிவற்ற தலைமை நெருக்கடி வெளிப்படுவதால் உலகளாவிய கவனம் சீனா மீது குவிந்துள்ளது.