
உலகளாவிய work-life பேலன்ஸ் குறியீட்டில் இந்தியா பின்தங்கியுள்ளது; நியூசிலாந்து தொடர்ந்து முதலிடம்
செய்தி முன்னோட்டம்
உலகளாவிய வாழ்க்கை-வேலை சமநிலை (Work-Life Balance) குறியீட்டில் இந்தியா 60 நாடுகளில் 42வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் திகழ்கிறது. 2025ஆம் ஆண்டிற்கான குறியீட்டினை ரிமோட் (Remote) நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், தொழிலாளர்களின் வேலை நேரம், விடுப்பு நாட்கள், ஊதியக் கொள்கைகள், சுகாதார சேவைகள், LGBTQ+ உட்பட உள்ளடக்கம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பன்முக குறிகாட்டிகள் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
டாப் நாடுகள்
பட்டியலில் டாப் இடங்களை பிடித்த நாடுகள்
1. நியூசிலாந்து - 86.87 மதிப்பெண்கள் 2. அயர்லாந்து - 81.17 3. பெல்ஜியம் - 75.91 நியூசிலாந்து தொழிலாளர்களுக்கு வருடத்திற்கு 32 நாட்கள் சட்டபூர்வ விடுப்பு, 26 வார ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு, நோய்வாய்ப்பட்ட நாட்களுக்கு முழு ஊதியம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இவை நாட்டை குறியீட்டின் உச்சியில் வைத்துள்ளன.
இந்தியா
பட்டியலில் இந்தியாவின் நிலை
இந்த பட்டியலில் 42வது இடத்தில் உள்ள இந்தியா, 45.81 மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளது. இந்திய ஊழியர்களுக்கு 35 நாட்கள் ஆண்டு விடுப்பு உரிமையாக இருந்தாலும், நீண்ட வேலை நேரம் குறைவான நோய்வாய்ப்பு ஊதியம் மோசமான சுகாதார சேவைகள் இதனைப் பின்தள்ளிய முக்கிய காரணிகள் என கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா
இந்தியாவிற்கும் பின்தங்கியுள்ள அமெரிக்கா
இந்த பட்டியலில் உலகின் வல்லரசான அமெரிக்கா - 59வது இடம் (31.17 மதிப்பெண்கள்) அமெரிக்காவில் ஊதிய விடுப்பு, அரசு நலத்திட்டங்கள் குறைவாக உள்ளதோடு, வேலை அழுத்தமும் அதிகம் என்பதால் இது நடந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் நாடு நைஜீரியா (26.67 மதிப்பெண்கள்)
டாப் 10
டாப் 10 நாடுகள் தரவரிசை
1. நியூசிலாந்து - 86.87 2. அயர்லாந்து - 81.17 3. பெல்ஜியம் - 75.91 4. ஜெர்மனி - 74.65 5. நார்வே - 74.20 6. டென்மார்க் - 73.76 7. கனடா - 73.46 8. ஆஸ்திரேலியா - 72.10 9. ஸ்பெயின் - 71.94 10. பின்லாந்து - 70.86 இந்த தரவரிசை உலகளாவிய நிறுவனங்களுக்கு தொழிலாளர்கள் நலத்தைக் கருத்தில் கொண்டு வேலைமுறை வகுப்பதில் முக்கியமான குறிகாட்டியாக விளங்குகிறது.