LOADING...
தமிழகத்தில் நாளை முதல் மழை: டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த குட் நியூஸ்
நாளை முதல் சில தமிழக மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் நாளை முதல் மழை: டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த குட் நியூஸ்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 21, 2026
06:02 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, நாளை முதல் சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு சத்தீஸ்கர் முதல் குமரிக் கடல் வரை நிலவும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக பின்வரும் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை(ஏப். 22): மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப். 23 முதல் 25 வரை: குறிப்பிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏப். 26, 27: மீண்டும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்ப நிலை

வெப்ப நிலை எச்சரிக்கை

மழை ஒருபுறம் இருந்தாலும், உள் தமிழக மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 22 முதல் 25 வரை உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். சென்னை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பான அளவிலேயே இருக்கும். தமிழகத்தின் மற்ற பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் நாளை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

Advertisement