Loading...
வாட்ஸ்அப் மீடியா சேவைகள் பாதிப்பு: புகைப்படம், வீடியோ அனுப்ப முடியாமல் உலகளவிலான பயனர்கள் அவதி
அதிகாலை முதலே வாட்ஸ்அப் சேவை பாதிப்பு குறித்த புகார்கள் அதிகரிக்கத் தொடங்கின

வாட்ஸ்அப் மீடியா சேவைகள் பாதிப்பு: புகைப்படம், வீடியோ அனுப்ப முடியாமல் உலகளவிலான பயனர்கள் அவதி

எழுதியவர் Venkatalakshmi V
Aug 10, 2026
11:51 am

செய்தி முன்னோட்டம்

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் GIF போன்ற மல்டிமீடியா கோப்புகளை அனுப்புவதில் உலகளவில் பெரும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். டவுன்டிடெக்டர் தளத்தின் தரவுகளின்படி, திங்கள்கிழமை அதிகாலை முதலே வாட்ஸ்அப் சேவை பாதிப்பு குறித்த புகார்கள் அதிகரிக்கத் தொடங்கின. இந்த சேவை பாதிப்பு இந்தியா, பிரிட்டன், பிரான்ஸ், பிரேசில், கனடா, மெக்சிகோ, ஸ்பெயின் மற்றும் கொலம்பியா உள்ளிட்ட பல நாடுகளிலும் உணரப்பட்டுள்ளதால், இது குறிப்பிட்ட ஒரு பிராந்தியத்துடன் நிற்காமல் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள கோளாறு என்பது தெளிவாகிறது.

சிக்கல்

மல்டிமீடியா பகிர்வில் மட்டுமே சிக்கல்

வழக்கமான டெக்ஸ்ட் மெசேஜ்கள் எந்த பிரச்சனையும் இன்றி இயல்பாக சென்று சேரும் நிலையில், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அப்லோட் செய்யும்போது அவை நீண்ட நேரம் லோடிங் நிலையிலேயே இருக்கின்றன அல்லது அனுப்ப இயலாமல் தோற்றுப்போகின்றன.

சில பயனர்களுக்குப் படங்கள் சாட் பார்வையில் தெரிந்தாலும் 'Retry' என்ற அறிவிப்பே காட்டப்படுகிறது.

ஸ்மார்ட்போன்களை ரீஸ்டார்ட் செய்வது, வைஃபை மற்றும் மொபைல் டேட்டாவை மாற்றி அமைப்பது, செயலியை மீண்டும் ரீ-இன்ஸ்டால் செய்வது போன்ற வழக்கமான எளிய தீர்வு முயற்சிகள் எதுவுமே இந்த மல்டிமீடியா சிக்கலைச் சரி செய்யவில்லை எனப் பயனர்கள் சமூக வலைதளங்களில் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தத் திடீர் சேவை பாதிப்பு குறித்து மெட்டா அல்லது வாட்ஸ்அப் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.

ADVERTISEMENT