LOADING...
தமிழகத்தில் நாளை கனமழை எங்கு பெய்யும்? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட மாவட்டங்களின் முழு விபரம்!
நாளை 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் நாளை கனமழை எங்கு பெய்யும்? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட மாவட்டங்களின் முழு விபரம்!

எழுதியவர் Sekar Chinnappan
Jun 21, 2026
05:59 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் பரவலாகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. வளிமண்டல சுழற்சி மற்றும் பருவமழை நகர்வு காரணமாகத் தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

8 மாவட்டங்கள்

இன்று 8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை

வானிலை அறிக்கையின்படி, இன்று (ஜூன் 21) தமிழகத்தின் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், திருச்சி மற்றும் மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களில் மழையின் போது மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும். எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

5 மாவட்டங்கள்

நாளை 5 மாவட்டங்களில் நீடிக்கும் மழை எச்சரிக்கை

நாளை திங்கட்கிழமை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி மற்றும் சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இந்த மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். கூடுதலாக, ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து ஜூன் 25-27 வரை வட கடலோரத் தமிழகம் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisement

சென்னை

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். நாளையும் இதே நிலை நீடிக்கும் என்றாலும், அதிகபட்ச வெப்பநிலை சற்று குறைந்து 38 டிகிரி செல்சியஸாகப் பதிவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Advertisement