Loading...
'எல் நினோ' தாக்கம் ஆய்வு: வெதர்மேன் பிரதீப் ஜான் உட்பட 7 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு
ஆய்வு செய்யத் தமிழ்நாடு அரசு புதிய வல்லுநர் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது

'எல் நினோ' தாக்கம் ஆய்வு: வெதர்மேன் பிரதீப் ஜான் உட்பட 7 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு

எழுதியவர் Venkatalakshmi V
Jul 30, 2026
12:22 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் 'எல் நினோ' (El Niño) வானிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் மழைப்பொழிவு குறைவு குறித்த விரிவான ஆய்வு செய்யத் தமிழ்நாடு அரசு புதிய வல்லுநர் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இக்குழுவில் பிரபல வானிலை ஆய்வாளர் 'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் உட்பட மொத்தம் 7 நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு எல் நினோ காலநிலை நிகழ்வு காரணமாகத் தமிழ்நாடு இயல்பான மழைப்பொழிவைப் பெறத் தவறியுள்ளது. மேலும், காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான கேரளா மற்றும் கர்நாடகாவிலும் பருவமழை பொய்த்ததால், மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாமல் காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாத சூழல் உருவானது.

பணிகள்

குழுவின் முக்கியப் பணிகள் மற்றும் அறிக்கை

பருவ மழை பொய்த்ததன் காரணமாகத் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் முன்எப்போதும் இல்லாத அளவிலான கடுமையான வறட்சியை எதிர்கொண்டு வருகின்றன.

தற்போது அமைக்கப்பட்டுள்ள இக்குழு எல் நினோ மாற்றங்களால் விவசாயம், குடிநீர் ஆதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விரிவாக ஆய்வு செய்யும்.

கள நிலவரங்களை ஆய்வு செய்த பிறகு, வறட்சியை எதிர்கொள்வதற்கான உடனடி நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால வானிலை மாற்றங்களை சமாளிப்பதற்கான திட்டங்கள் குறித்த விரிவான அறிக்கையைத் தமிழ்நாடு அரசிடம் இக்குழு சமர்ப்பிக்கும்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT