Loading...
டெல்லி விமான நிலையத்தில் பெரும் பாதுகாப்பு விதிமீறல்: குடிவரவு சோதனையின்றி ஜெர்மனி சென்ற 3 வெளிநாட்டவர்கள்
மூன்று இத்தாலி நாட்டுப் பயணிகள், கட்டாயக் குடிவரவுச் சோதனையை செய்யாமலேயே சர்வதேச விமானத்தில் ஏறிச் சென்றுள்ளனர்

டெல்லி விமான நிலையத்தில் பெரும் பாதுகாப்பு விதிமீறல்: குடிவரவு சோதனையின்றி ஜெர்மனி சென்ற 3 வெளிநாட்டவர்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 15, 2026
10:43 am

செய்தி முன்னோட்டம்

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு மற்றும் நடைமுறை விதிமீறல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமிர்தசரஸில் இருந்து டெல்லி வழியாக ஜெர்மனியின் முனிச் நகருக்குப் பயணம் செய்த மூன்று இத்தாலி நாட்டுப் பயணிகள், கட்டாயக் குடிவரவுச் சோதனையை செய்யாமலேயே சர்வதேச விமானத்தில் ஏறிச் சென்றுள்ளனர். இந்தத் தீவிரப் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஏர் இந்தியா நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி (CEO) கேம்ப்பல் வில்சனுக்கு கண்டன நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பின்னணி

சம்பவத்தின் பின்னணி

செப்டம்பர் 4 அன்று, மூன்று இத்தாலியப் பயணிகள் அமிர்தசரஸில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்தடைந்தனர்.

அங்கிருந்து அவர்கள் லுஃப்தான்சா விமானம் மூலம் முனிச் நகருக்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர்.

அமிர்தசரஸ் விமான நிலையத்திலேயே இவர்களுக்கு டெல்லி-முனிச் விமானத்திற்கான இணைப்புப் போர்டிங் பாஸ்கள் (Boarding Passes) தவறாக வழங்கப்பட்டன.

டெல்லி வந்தடைந்ததும், இவர்கள் அரைவல் பகுதி வழியாக சென்று குடிவரவு அதிகாரிகளைச் சந்தித்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

ஆனால், பணியாளர்களின் வழிகாட்டுதல் தவறு காரணமாக, நேரடியாகச் சர்வதேச இடமாற்ற பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சோதனையின்றி லுஃப்தான்சா விமானத்தில் ஏறி ஜெர்மனிக்குச் சென்றுவிட்டனர். ---

கொள்கை மீறல்

ஹப்-அண்ட்-ஸ்போக் கொள்கை மீறல்

ஏர் இந்தியா நிறுவனம் அமிர்தசரஸ் போன்ற குறிப்பிட்ட இடங்களில் ஹப்-அண்ட்-ஸ்போக் என்ற திட்டத்தை இயக்குகிறது.

இதன்படி, தொடக்க விமான நிலையத்திலேயே குடிவரவுச் சோதனையை முடித்துவிட்டு டெல்லி வழியாக நேரடியாக பயணம் செய்ய முடியும்.

3 இத்தாலி நாட்டவர்கள் (சுர்ஜித் சிங், பல்விந்தர் கவுர், குர்தேவ் சிங்) பயணம் 'ஹப்-அண்ட்-ஸ்போக்' திட்டத்தின் கீழ் வராததால் டெல்லியில் குடிவரவுச் சோதனை கட்டாயமாகும்.

மத்திய அரசு அனுப்பிய 9 கேள்விகளுக்கு ஏர் இந்தியா செப்டம்பர் 19-க்குள் பதிலளிக்கக் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தைக் கடுமையான பாதுகாப்பு மீறலாகக் கருதிய மத்திய அரசு, மத்திய உள்துறைச் செயலாளர் தலைமையில் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.

ADVERTISEMENT