Loading...
இரண்டாவது நாளாக குறைந்தது சவரன் விலை; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
இரண்டாவது நாளாக குறைந்தது சவரன் விலை

இரண்டாவது நாளாக குறைந்தது சவரன் விலை; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 15, 2026
11:35 am

செய்தி முன்னோட்டம்

இன்று நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, செவ்வாய்கிழமை (செப்டம்பர் 15), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹85 குறைந்து ₹14,040 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹680 குறைந்து ₹1,12,320 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹92 குறைந்து ₹15,317 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹736 குறைந்து ₹1,22,536 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை நிலவரம்

18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது.

அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹85 குறைந்து ₹11,810 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹680 குறைந்து ₹94,480 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே செவ்வாய்கிழமை வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹250 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,50,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT