LOADING...
இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
டெல்டா மாவட்டங்களில் மழைப்பொழிவு நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 05, 2025
08:21 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைப்பொழிவு நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்: தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை புதுக்கோட்டை அரியலூர் திருச்சிராப்பள்ளி இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம்

வெப்பச்சலனம் காரணமாக KTCC மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தற்போது காணப்படும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது பதிவின்படி, KTCC தவிர டெல்டா மாவட்டங்கள் மற்றும் மத்திய மற்றும் உள் மாவட்டங்கள் உட்பட பல மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த இரு நாட்களாக சென்னையில் அங்கங்கே பெய்த மழை அடுத்த 3 நாட்களுக்கு தொடரக்கூடும் என்றும், அதன் பிறகு மழையின் தீவிரம் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது தவிர கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.