LOADING...
சென்னையை நெருங்கும் 'தித்வா' புயல்: 4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
சென்னையை நெருங்கும் 'தித்வா' புயல்

சென்னையை நெருங்கும் 'தித்வா' புயல்: 4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 27, 2025
10:30 am

செய்தி முன்னோட்டம்

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (நவ. 28) காலைக்குள் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை நள்ளிரவில் இலங்கையை ஒட்டிய கடல் பகுதிகளில் புயலாகவும் மாற வாய்ப்புள்ளது. புதிதாக உருவாகும் இந்தப் புயலுக்கு, ஏமன் நாட்டின் பரிந்துரையான 'தித்வா' (Ditwah) என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. (அரபு மொழியில் தித்வா என்றால் 'தீவு' என்று பொருள்).

நகர்வு

நகர்வு மற்றும் கரையைக் கடக்கும் வாய்ப்பு

நவம்பர் 29 : தித்வா புயல் வடக்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து, சனிக்கிழமை காலை டெல்டா கடற்கரைப் பகுதியை வந்தடையும். நவம்பர் 30: புயல் தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னைக்கு அருகில் கரையை கடக்கவோ அல்லது நிலை கொள்ளவோ வாய்ப்பு உள்ளது. நாளை முதல் டிசம்பர் 1 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. வட கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை வரையும், புயலின் நகர்வை பொறுத்து சில இடங்களில் அதி கனமழை வரையும் பெய்ய வாய்ப்புள்ளது.