LOADING...
தென் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு
தென் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

தென் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 10, 2025
05:43 pm

செய்தி முன்னோட்டம்

வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு (நவம்பர் 11 முதல் 13 வரை) தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மைய அறிக்கையின்படி, நவம்பர் 10 அன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நவம்பர் 11 அன்று தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை

சென்னை வானிலை நிலவரம்

நவம்பர் 12 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான முதல் மிதமான மழை தொடரும். திருநெல்வேலி மலைப்பகுதிகள், இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 13 அன்று தமிழகத்தின் சில பகுதிகளில் மழை நீடிக்கும். கோயம்புத்தூர், நீலகிரி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, நவம்பர் 10 மற்றும் 11 அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.